KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் டிரேட்மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக “பேங் பேங்” உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H C வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார். சவுண்டு டிசைனை ‘அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync சினிமா செய்திருக்கிறார்கள். சவுண்டு மிக்ஸிங்-ஐ தெலுங்கனா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனேன் செய்திருக்கிறார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
KRG நிறுவனத்தின் 4வது படைப்பாக உருவாகும் “பேங் பேங்” படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் படப்பிடிப்பு இந்தோனேசியாவில் (indonesia) உள்ள மவுண்ட் ப்ரோமோ (mount bromo) என்ற இடத்தில் செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் நிலையில் , பேங் பேங் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது
Link : https://www.youtube.com/watch?v=Ytatt40eE2o
