பாம் படத்தில் நடித்து அசத்திய Arjundas

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட் நடிப்பில் இன்று ‘பாம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணனுக்கு குரல் கொடுத்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். இந்த ஆண்டு அஜித் குமாருக்கே வில்லனாக டபுள் ஆக்ஷனில் குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த நடிப்பு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. ஒரு பக்கம் வில்லனாக நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் அசத்தி வருகிறார் அர்ஜுன் தாஸ்.தற்போது வெளியான பாம் படத்தில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் அசரவைத்துள்ளார். அர்ஜுன் தாஸ். காளிவெங்கட்டை மட்டுமல்ல கதையையும் சுமந்திருக்கிறார். கர்ஜிக்கும் குரலை காட்டி சாமியாடும் இடங்களில் சிலிர்ப்பு. முதல் பாதியின் ஆரம்பத்தில் படம் மெதுவாக சென்றாலும், ஒரு கட்டத்தில் காளி வெங்கட் உயிரிழக்கும் பகுதியில் இருந்து சூடுபிடித்து. இரண்டாம் பாதியிலும் காட்டுத் தீ எரிந்துகொண்டேதான் இருந்தது. கடைசி கிளாமேக்ஸ் வரை திருவண்ணாமலை ‘ஜோதி’ போல் பிரகாசமாக எரிந்தது. ஊர் மக்கள் ஒற்றுமையாக செய்யும் சில செயல்கள் டச்சிங் ஆக இருக்கிறது. ஆனால், சில சீன்கள் நீளமாக, ரொம்பவே குழப்பமாக இருக்கிறது. காமெடி டோனில் வரும் காட்சிகள் சிரிப்பை தரவில்லை. ஒரு பிணத்துக்குள் சாமி வருமா? ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு சாமி திருவிழா நடத்த முடியுமா? பிணம் பாம் போடுமா என்று யோசித்தாலே படம் அடிபடுகிறது. ‘பிணம் பாம்’ சம்பந்தப்பட்ட சீன் கள், அந்த சவுண்ட் முகம் சுளிக்க வைக்கிறது. இப்படியொரு கான்செப்ட், இப்படியொரு தலைப்பா? அர்ஜூன்தாஸ் என்ன நினைக்கிறார். ஊர் மக்கள் பிரச்னை என்ன? சாங்கியம் என்ன சொல்கிறது? பூசாரி என்ன நினைக்கிறார் என பல கேள்விகளுக்கு விடை இல்லை. ஜாதி ஒழிக்க சாமியை கையில் எடுத்து இருக்கிறார். அந்த விஷயத்தில் தெளிவு இல்லை. ஜாதி வேண்டாம். ஏற்றத்தாழ்வு வேண்டாம். சாமி பெயரில் சண்டை வேணாம். ஒற்றுமையாக வாழுங்கள் என டைரக்டரின் எண்ணத்தை பாராட்டலாம். ஆனால், அதை குழப்பி அடித்து, ஏதோ சொல்ல நினைத்து, எதையோ கொடுத்து இருக்கிறார்.