சென்னை பைல்ஸ் முதல் பக்கம் விமர்சனம்

அனீஸ் அஸ்ரப் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சென்னை பைல்ஸ் முதல் பக்கம் திரைப்படத்தின் விமர்சனம் பார்போம்.
வழக்கம்போல் சீரியல் கில்லர்களில் வருவது போல் ஒரு சீரியல் கிள்ளர் ஒரு கொலையை செய்து விட்டு அவனது முகத்தையும் சிதைத்து விட்டு அதன் மீது முகமூடி வைத்து விட்டு செல்கிறார். இது மாதிரியான கொலைகள் வெவ்வேறு ஊர்களில் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இன்னொரு பக்கம் மிகப்பெரிய க்ரைம் நாவல் எழுத்தாளரின் மகனான வெற்றியை ஒரு பத்திரிக்கை அலுவலகம் சந்தித்து அவரது தந்தையை பற்றிய நெடுந்தொடர் எழுத வேண்டும் என்று சென்னைக்கு அழைக்கிறது. சென்னைக்கு வந்தவுடன் அவர் சில்பா மஞ்சுநாத்தை சந்தித்து ஒரு பக்கம் தனது தந்தையை பற்றிய விஷயங்களை கூறவும் இன்னொரு பக்கம் ரெடின் கிங்ஸ்லியுடன் ஏற்பட்ட நட்பால் தம்பி ராமையாவை சந்திக்க முடிந்து அதன் மூலம் நிறைய குற்ற வழக்குகளை, இவர் துப்பறியும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.இந்த துப்பறியும் சந்தர்ப்பம் ஒரு கட்டத்தில் அந்த சீரியல் கில்லர் யார் என்பதை கண்டுபிடிக்க மிகவும் உதவுகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
வெற்றியின் ஒரே மாதிரியான நடிப்பு பெரிய சலிப்பை மட்டுமே தந்துள்ளது. நடிகை சில்பா இந்த படத்தில் எதற்கு நடித்தார் என்று நடித்தார் தெரியவில்லை படத்தில் அவருக்கு எவ்விதமான வேலையும் இல்லை. தம்பி ராமையாவின் காமெடி, சிரிக்க வைக்கும் காமெடிகள் மறந்து விடும் அளவிற்கு கடுப்பின் உச்சபட்சம், ஆரம்பத்தில் வந்த ரெடின் கிங்ஸ்லி திடீரென்று காணாமல் போய்விடுகிறார்.
ஒரு க்ரைம் திரில்லர் என்றாலே திரைக்கதை தான் முக்கிய வடிவம் பெறும். ஆனால் இந்த படத்தில் திரைக்கதையில் சுத்தமாக லாஜிக் ஓட்டைகள் 1, 2 இல்லை, படம் முழுவதுமே வெறும் லாஜிக் ஓட்டைகளை மட்டுமே கொண்டுள்ளது. ஒரு படம் முடிந்த பின் இன்னொரு படத்தை இரண்டாம் பாதியில் காட்சிகளல் அமைந்துள்ளது. அதை முதல் பாதியுடன் கனெக்ட் செய்ய முயற்சி செய்து இருக்கிறார்கள். படத்தில் வரும் வசனம் தெளிவாக இல்லை. துப்பறியும் விதம் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. இசை ராட்சசன் படத்தின் இசையை அப்படியே எடுத்து இந்த படத்தில் வைத்து விட்டார்கள் போல. ஒளிப்பதிவு சுமார் ரகம்.
இந்தப் படத்தின் இயக்குனர் அனீஸ் அஸ்ரப் இந்த படத்தினை எந்த நம்பிக்கையில் எடுத்தார் என்று தெரியவில்லை. மிகப்பெரிய சொதப்பலின் உச்சத்தில் உள்ளது.இறுதியாக சென்னை கிரைம் பைல்ஸ் முதல் பக்கம் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது.