ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் “வானமே எல்லை” நிகழ்வு

சென்னை, நவம்பர் 2024 – குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமூகச் செயல்பாடு மற்றும் உள்ளடக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு தனது வருடாந்திர “வானமே எல்லை” நிகழ்வை ஆனந்தம் மற்றும் விஜிபி உலக தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளது. சேவாலயா, ஆனந்தம் கல்வி நிலையம், ஆனந்தம் சிறப்பு பள்ளி, செஸ் ஆனந்த இல்லம் ஆகியவற்றில் இருந்து வரும் குழந்தைகள் மற்றும் தோழி அமைப்பில் இருந்து வரும் திருநங்கைகள், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்காக சிறப்பு விமானப் பயண அனுபவம் வழங்கும் நிகழ்வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பயணம் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறது. சேலத்தில் அவர்கள் தரையிறங்கும் போது சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ் அவர்களின் அன்பான வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைக்கவிருக்கின்றன. உள்ளடக்கத்தையும், கனவுகளையும், எட்டக்கூடிய எல்லைகளை கொண்டாடும் இவ்விழாவில் சிறப்புமிகு பிரபலங்கள் இப்பயணத்தில் பங்கேற்கின்றனர்.

இயற்கை விஞ்ஞானி மற்றும் மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், இசை அமைப்பாளர் மற்றும் ரெயின்ட்ராப்ஸ் நல்லெண்ண தூதர் ஏ.ஆர். ரைஹானா, ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு. அரவிந்த் ஜெயபால் ஆகியோர் ரெயின்ட்ராப்ஸ் அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் குழந்தைகளின் பயணத்தில் பங்கெடுத்து இம்மாதிரியான அனுபவத்தை தருவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.

சேலத்தில் தரையிறங்கியதும் குழுவினர் ஏற்காடு நோக்கி பயணித்து, அங்கு ஒரு இரவு தங்கிவிட்டு இயற்கை அழகுகள் நிறைந்த ஏற்காடு படகு இல்லம், செர்வாய்ஸ் பாயிண்ட், பிகூ பூங்கா போன்ற இடங்களைச் சுற்றுப்பார்த்து, மறுநாள் ரயில் மூலம் சென்னை திரும்புவார்கள்.

See Also

ரெயின்ட்ராப்ஸ் அறக்கட்டளையின் “வானமே எல்லை” நிகழ்வு சமூக ஒற்றுமையையும், தேவையுடையோரின் மேம்பாட்டையும் வலியுறுத்தும் ஒரு சிறந்த முயற்சியாக திகழ்கிறது. இவ்வினோதமான அனுபவம் இளம் இதயங்களை பெரிதும் தூண்டுவதோடு, அவர்கள் எதிர்காலத்தை நோக்கி உயர்ந்த கனவுகளைக் காண உதவும்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)