Now Reading
எடப்பாடியை ஏன் கூட்டணி தலைவராக ஏற்கல தெரியுமா.? மேடையில் கேவலமாக விமர்சித்த அண்ணாமலை

எடப்பாடியை ஏன் கூட்டணி தலைவராக ஏற்கல தெரியுமா.? மேடையில் கேவலமாக விமர்சித்த அண்ணாமலை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு கருத்துக்களை பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மோசமாக விவரித்து இருக்கிறார். அதாவது தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டுமென்றால் வருகிற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்க சட்டமன்றத் தேர்தலை தவிர வேறு வாய்ப்பு கிடையாது. அதனால் அதற்காக போராடும் விதமாக கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். நேர்மை நாணயத்தைப் பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். கொங்கு பகுதியில் இருந்து வந்தவன் நான். கூவத்தூரில் நடந்தது அலங்கோலம், கூவத்தூரில் ஒப்பந்தம் அமைப்பில் முதலமைச்சரை தேர்வு செய்தீர்கள்.

அதன்பிறகு தவிழ்ந்து கொண்டே ஒவ்வொருவருடைய காலையும் விழுந்து பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பண்பாடு மிக்க விவசாய மகனான என்னை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. பச்சை மையால் 10 ஆண்டுகள் வரை கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச தற்குறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மேடையில் கேவலமாக விமர்சித்திருக்கிறார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு நான்காவது இடம் கூட கிடைக்காது. இதுவரை அதிமுக தலைவருக்கும் எனக்கும் எந்தவித வாய்க்கா தகராறும் வந்ததே கிடையாது. 20019 ஆம் ஆண்டு வாரணாசியில் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய போகும்போது நான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் ஒரு தலைவராக கூப்பிடுகிறேன்.

See Also

அதற்கு அவர் தோற்கப் போகிற மோடிக்கு நான் ஏன் வரவேண்டும் என்று எப்பொழுது என்னுடைய தலைவரை பற்றி என்னிடமே அப்படி ஒரு வார்த்தை சொன்னாரோ, அப்பொழுதே இந்த மானமுள்ள அண்ணாமலை, கூட்டணி கட்சி தலைவராக எப்பொழுதுமே எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முடிவு பண்ணிட்டேன் என காரசாரமாக எடப்பாடி பழனிச்சாமியை பற்றி விமர்சித்து இருக்கிறார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)