துரைமுருகனை சபையில் அசிங்கப்படுத்தி பேசிய ரஜினி, கைதட்டி சிரித்த முதல்வர்.. பதிலடி கொடுத்த அமைச்சர்

மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி நினைவாக “கலைஞர் எனும் தாய்” என்ற பெயரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

அந்த வகையில் இந்த புத்தகத்தை முக ஸ்டாலின் வெளியிடும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொது மேடையில் பேசினார். அப்படி ரஜினி பேசியது, துரைமுருகன் என்பவர் ஒருவர் இருக்கிறார், அவர் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டினார். அவரிடம் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லி இது எப்படி இருக்கு எப்படி பண்ணலாம் என்று கேட்டால் அது எதற்கும் பதில் சொல்லாமல் சந்தோசம் என்று ஒத்த வார்த்தையில் முடித்து விடுவார்.

அதுக்கு என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியாது என்று சொல்லி ஒரு கதையும் சொல்லிவிட்டார். அதாவது பள்ளிக்கூடத்தில் ஒரு புது டீச்சர் வருகிறார் என்றால் அவர்களுக்கு புதுசாக சேர்ந்து உள்ள மாணவர்களை சமாளிப்பது பெரிய விஷயமே இல்லை. ஆனால் ரேங்க் ஹோல்டர் வாங்கியும் நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் பழைய மாணவர்களை சமாளிப்பது தான் ரொம்பவே சாமர்த்தியம் வேண்டும் என்று ரஜினி, அமைச்சர் துரைமுருகனை கலாய்த்து பேசி இருக்கிறார்.

இதை ஸ்டாலின் கைதட்டி சிரித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சபையும் சிரித்து துரைமுருகனை அசிங்கப்படுத்தி விட்டது. ஆனால் ரஜினி, இந்த அளவுக்கு தைரியமாக ஒரு குசும்பு தனமான பேச்சை அமைச்சருக்கு எதிராக பொது மேடையில் வைப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவே மாட்டோம். அந்த வகையில் பாரபட்சமே இல்லாமல் கலாய்த்து விட்டார்.

See Also

இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த துரைமுருகனிடம், ரஜினி பேசியதைப் பற்றி என்ன பதில் சொல்றீங்க என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன் கொடுத்த பதிலடி, அவர் சொன்னதற்கு அவர் வழியில் நான் பதில் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் அவர் கூறியது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி பல்லு உதிர்ந்து, தாடி வச்சு பேரன்பேத்தி எடுத்த வயசிலும் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கும் வயசான ஹீரோக்கள் கொஞ்சம் ஒதுங்கி போய்விட்டால் இளம் ஹீரோக்கள் அவர்களை நிரூபித்துக் காட்ட வாய்ப்பாக இருக்கும். ஆனால் அதை பண்ணாமல் வயசானாலும் நான் ஹீரோவாக நடிப்பேன் என்று நடித்துக் கொண்டு வருவதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்று அதிரடியாக பதில் அளித்திருக்கிறார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)