Teenz விமர்சனம்
12 சிறுவர்கள் ஆரம்பத்திலேயே தாங்கள் சிறுவர்கள் இல்லை பாரீன் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களை பெற்றொர்கள் தங்களுக்கு ஈகுவலாக பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர்.
அத்தகைய பேச்சில் தாங்கள் பெரியவர்கள் என்று நிரூபிக்க, ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதையும் பார்த்துவிடலாம் என பள்ளிக்கு கட் அடித்து செல்கின்றனர்.அப்படி செல்லும் வழியில் ஒரு பையனை இழுத்துக்கொண்டு 13 பேராக செல்ல, செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை பெறுகிறது.
அதை தொடர்ந்து காட்டு வழியில் சிறுவர்கள் பயணிக்க, செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து செல்கின்றனர். என்ன என்று புரியாமல் சிறுவர்கள் முழிக்க, அடுத்தடுத்து தொலைந்து போகும் சிறுவர்களை மற்ற சிறுவர்கள் தேட, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
டைட்டில் கார்டிலேயே பார்த்திபன் நம்மை படத்திற்குள் கொண்டு வருகுறார். படத்தில் நடித்த சிறுவர்களின் பெயர்களை வைத்து ஒரு பாடலாக விவரித்து அவர்கள் குணாதிசியம் சொன்ன விதம் சூப்பர்.அதோடு அந்த சிறுவர்கள் அனைவரும் எதோ பெரிய மனிதர்கள் போல் ஆரம்பத்திலேயே பேசுவது நமக்கு கொஞ்சம் எரிச்சல் என்றாலும் இந்த ஜெ சீ கலாச்சாரத்தில் வளர்பவர்களுக்கு நியாயமாகவே தெரியும்.
படத்தின் முதல் பாதி அடுத்து என்ன, இவர்களுக்கு என்ன ஆனது என்ற ஒரு பதட்டத்தை ஏற்படுத்தினாலும், பேயா, அமானுஷியமா இரண்டாம் பாதியில் இதற்கான லாஜிக்கை பார்த்திபன் உடைக்கும் இடம் அட இப்படியும் யோசிக்கலாமே என்று கூற வைக்கின்றது.அதிலும் இடைவேளை போது மலைப்பாம்பு வயிற்றை சிறுவர்கள் கிழிக்கும் இடம் பதட்டம் தான். இப்படி முதல் பாதி முழுவதும் பல கேள்விகுறியுடன் நகர்வது சுவாரஸ்யம்.ஆனால், இரண்டாம் பாதியில் இவர்கள் தொலைவதற்கான காரணம் சுவாரஸ்யமான டாபிக் என்றாலும், அதை படமக்கிய விதம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.
அதோடு யோகிபாபு எல்லாம் எதற்கு வருகிறார் 2 காட்சியில் என்றே தெரியவில்லை, படத்திற்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் பேஸ் வேல்யூகாகவே பயன்படுத்தியுள்ளனர்.ஆரம்பத்தில் பேய், பிசாசு என்று நகர்ந்த கதை இரண்டாம் பாதியில் எடுக்கும் சயின்ஸ் பிக்ஷன் அவதாரமும் அத்தனை ஆழமாக எழுதப்படவில்லை. ஆடு, மாடு, பறவை எனச் சுற்றிச் சுழலும் அந்த இடைவேளைக் காட்சி சற்றே சுவாரஸ்யம் தந்தாலும் அந்த எதிர்பார்ப்பை இரண்டாம் பாதி தக்க வைக்கத் தவறுகிறது. வானியற்பியலாளராக வரும் பார்த்திபன், வெறும் வசனங்களாலேயே காட்சிகளின் தன்மையை விளக்க ஆரம்பித்துவிடுகிறார். அவர் மட்டுமின்றி, ‘அது வேற மொழியில இருக்கு. அவர்தான் சயின்டிஸ்ட் ஆச்சே, அவர் டிகோட் பண்ணிடுவார்’ என்கிற ரகத்தில் பிற பாத்திரங்களும் விளக்கவுரைகளை அளித்துக்கொண்டே இருக்கின்றனர். க்ளைமாக்ஸில் ‘ஆதரவற்றவன்’ என்பதற்காக ஒரு கதாபாத்திரம் எடுக்கும் அந்த முடிவும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பது பல காட்சிகளின் தெரிகிறது, இமான் இசையில் எந்த பாடலும் பெரிதும் மனதில் நிற்கவில்லை.சொல்ல வந்ததை சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாமல் நகர்த்தி சென்றது.மொத்தத்தில் இந்த டீன்ஸ் சுவாரஸ்யம் இல்லாத ஒரு தேடல்.