அட்லீ மகனா இது.. எவ்வளவு cute

அட்லீ கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிஸியான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் நான்கு படங்களை இயக்கியிருக்கும் அவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மெர்சல் செய்தது. இந்தச் சூழலில் அட்லீ தனது படத்துக்கான டிஸ்கஷனை சமீபத்தில் தொடங்கினார். இந்நிலையில் அட்லீ மகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் பல காட்சிகளும் ஏன் படமே சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது. ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளிவருகின்றன. ஷாருக்கனை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அட்லீ. படத்துக்கு தமிழ்நாட்டில் மோசமான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வட மாநிலங்களில் செம பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. இதன் காரணமாக மீண்டும் ஒரு படம் அட்லியூடன் செய்ய ஷாருக் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்கிடையே ஹிந்தியில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கிறார் அட்லீ. அதன்படி கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு படத்தை தயாரித்துவருவதாகவும்; கூறப்படுகிறது. அவரை சுற்றி எத்தனை விமர்சனங்களும் வந்தாலும் பக்கா கமர்ஷியல் இயக்குநர் என்பதை அவர் தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே நிரூபித்துவிட்டார். அதே ஃபார்முலாவைத்தான் தனது அடுத்தடுத்த படங்களிலும் கையாண்டுவருகிறார்.
இதற்கிடையே அட்லீ ப்ரியாஐ காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மீர் என்ற மகன் இருக்கிறார். அவ்வப்போது அவர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும். சில மாதங்களுக்கு முன்புகூட அட்லீ தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தின்போது மீரையும் தனது மடியில் அமர வைத்திருந்த வீடியோ வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்போது மீரின் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள்; அட மீர் இவ்வளவு வளர்ந்துட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.