மாதவன் பிறந்தநாள்.. மிரள வைக்கும் சொத்து மதிப்பு
இந்திய அளவில் ஃபேமஸான நடிகர் மாதவன். சாக்லேட் பாய், ஆல் டைம் க்ரஷ் என்று பல பட்டங்களை பெற்றிருக்கும் மாதவன் கடைசியாக ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக ராக்கெட்ரி படத்தை இயக்கினார். அந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. சூழல் இப்படி இருக்க அவர் இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவரும் நிலையில் மாதவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் கடந்த 2000ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார் மாதவன். முதல் படம் எல்லோருக்கும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்றும்; அது பக்கா ஆக்ஷன் படமாக இருந்தால் அருமையாக இருக்கும் என்றும் பெரும்பாலான ஹீரோக்கள் நினைப்பார்கள். ஆனால் மாதவனுக்கு நேர் மாறாக நடந்தது. முழுக்க முழுக்க காதல் மட்டும் வழிந்தோடும் படமாக அலைபாயுதே அமைந்தது. அதில் மாதவனின் லுக்கும், நடிப்பும் அவருக்கென ஆண் ரசிகர்களை மட்டுமின்றி பெண் ரசிகைகளை கொண்டு வந்தது.அலைபாயுதே படத்துக்கு பிறகு அவர் நடித்த என்னவளே படம் சரியாக போகாவிட்டாலும் மாதவனுக்கான கிரேஸ் இருந்துகொண்டே இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் கௌதம் மேனன் இயக்குநராக அறிமுகமான மின்னலே படத்தில் கொஞ்சம் ஆக்ஷன் அவதாரம் எடுத்து அடுத்தக்கட்ட பாய்ச்சலை செலுத்தினார் Maddy. படம் மெகா ப்ளாக் பஸ்டர். தொடர்ந்து டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால் என வெரைட்டில் சப்ஜெக்ட்டில் நடித்த கெத்து காண்பித்தார்.
மாதவனின் கரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று ரன். அந்தப் படத்தில் மாதவனை டோட்டலாக மாற்றி ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்க வைத்தார் இயக்குநர் லிங்குசாமி. அதிலும், ஷட்டரை சாத்தும் சீனை இப்போது பார்த்தாலும் கூஸ் பம்ப்ஸாக இருக்கும். அந்தப் படமும் மெகா ஹிட்டடிக்க குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துவிட்டார் மேடி. வெரைட்டி ஹீரோ: சாக்லேட் பாயாக அறிமுகமாகி Rugged பாயாக அவதாரம் எடுத்த மாதவன் திடீரென கமலுடன் அன்பே சிவம் படத்தில் வேறு பரிமாணத்தில் நடித்திருந்தார். படம் வணிக ரீதியாக கொண்டாடப்படாவிட்டாலும் இப்போதுவரை படமும், மாதவன், கமல் நடிப்பும் க்ளாசிக்காக ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. அதையடுத்து அவர் நடித்த ஜே ஜே, பிரியமான தோழில், தம்பி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்கள் வேறு ஒரு மாதவனை ரசிகர்களிடம் காண்பித்தது. ஹிந்தியில் கலக்கிய மேடி: கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் 3 இடியட்ஸ், மும்பை மேரி ஜான் என வரிசையாக ஹிந்தி படங்களில் கலக்கிய மாதவன் சில வருடங்களுக்கு பிறகு தமிழில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதில் அவரது நடிப்பு பலரையும் மிரள வைத்தது. சொல்லப்போனால் மாதவன் 2.0வாக வந்து நின்றார். பிறகு அவர் நடித்த விக்ரம் வேதா படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இயக்குநர் மாதவன்: சூழல் இப்படி இருக்க விஞ்ஞானி நம்பிராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி படத்தை இயக்கி தேசிய விருதையும் வென்றார். இயக்குநராகவும் அந்தப் படத்தில் தனது முத்திரையை பதித்த மாதவன் இப்போது ஹிந்தியில் சில படங்களிலும், தமிழில் டெஸ்ட், அதிர்ஷ்டசாலி படங்களிலும் நடித்துவருகிறார். கடைசியாக அவர் ஹிந்தியில் ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். சொத்து மதிப்பு: இந்நிலையில் அவர் இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இச்சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 115 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். சென்னையில் ஒரு பிரமாண்ட பங்களா, மும்பையில் ஒரு பங்களா வைத்திருக்கும் அவரிடம், 80 லட்சம் ரூபாயில் ஒரு பென்ஸ் கார், ஒரு கோடி ரூபாயில் ஒரு ரேஞ்ச் ரோவர் கார், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோட் மாஸ்டர் க்ரூஸர், 27 லட்சம் மதிப்புள்ள யமஹா வி மேக்ஸ், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW பைக், 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி உள்ளிட்ட பைக்குகள் இருக்கின்றன. அவர் ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.