சம்யுக்தா மேனன் அளித்த பகிர் பேட்டி ….நடந்த நிகழ்வு என்ன ??
தனுஷ் நடித்த வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தனக்கு தெலுங்கு திரையுலகில் நடிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பகீர் கிளப்பியுள்ளார்.
28 வயதாகும் சம்யுக்த மேனன் கடந்த 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தீவண்டி, லில்லி போன்ற படங்களில் நடித்த அவர் தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
பீம்லா நாயக் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமான சம்யுக்தா மேனன் தற்போது டோலிவுட் இண்டஸ்ட்ரியில் நடிப்பது தனக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாத்தி ஹீரோயின்: களரி, ஜூலை காற்றில் உள்ளிட்ட தமிழ் படங்களில் சம்யுக்தா மேனன் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி திரைப்படம் தான் கொடுத்தது. “அடியாத்தி இது என்ன ஃபீலு.. உன்னால நான் பெய்லு” பாடலும் சம்யுக்தா மேனனை ரசிகர்களுடன் நெருக்க மாக்கியுள்ளது. தனுஷின் வாத்தி திரைப்படமும் பைலிங்குவலாக தெலுங்கு இயக்குநர் தான் உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பும் ஆந்திராவில் தான் படமாக்கப்பட்டது. டோலிவுட்டில் நடிப்பது சிரமம்: அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதியுடன் இணைந்து நடித்த சம்யுக்தா மேனன் கடந்த 2023-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான விருபாக்ஷா படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இந்நிலையில், தெலுங்கு திரை உலகில் நடிப்பது தனக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் மலையாள படங்களில் நடிக்கும் போது பெரிதாக மேக்கப்பே போடாமல் இயற்கையுடன் ஒன்றி நடிப்பேன். ஆனால், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் போது மேக்கப் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. மேக்கப் மற்றும் ஆடைக்கே கவனத்தை செலுத்துவதால் நடிப்பின் மீது கவனத்தை செலுத்த முடிவதில்லை எனக் கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் பதறிட்டேன்: எனக்கான காட்சியில் நடிக்க வசனங்களை மனப்பாடம் செய்துக் கொண்டிருந்த நிலையில், படத்தின் டேக் சொல்லப்பட்டு நடிக்க ஆயத்தமானேன். அப்போது திடீரென காஸ்ட்யூமர் ஓடி வந்து சேலை சரியாக இல்லை என்று கூறி அதை சரி செய்ய ஆரம்பித்தார். நடிக்க வேண்டிய காட்சியையே மறந்து போய் அவர் செய்வதை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதை கேட்க சாதாரணமாக இருக்கும். ஆனால், நடிகர்களுக்கு அந்த நேரத்தில் ஏற்படும் மனக் கஷ்டம் அவர்களுக்கு மட்டும் தான் புரியும் எனக் கூறியுள்ளார்.