3 சர்ப்ரைஸ்கள் கவினோட ஸ்டார் படத்தில் …
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்டார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
நட்புனா என்னான்னு தெரியுமா? படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவினுக்கு முதல் படம் பெரிதாக போகவில்லை. அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற கவினுக்கு ரசிகர்கள் அதிகளவில் கிடைத்தனர்.
பிக் பாஸுக்கு பிறகு கவின் நடித்த லிப்ட் மற்றும் கடந்த ஆண்டு வெளியான டாடா படங்கள் அவரை ரைசிங் ஸ்டாராக மாற்றிய நிலையில், இந்த ஸ்டார் திரைப்படம் நல்ல நடிகராகவே அடையாளம் காட்டியுள்ளது. 3 சர்ப்ரைஸ் இருக்கு: கவினின் ஸ்டார் படத்தில் மூன்று சர்ப்ரைஸ் இருக்கு அதை யாரும் ரிவீல் செய்ய வேண்டாம் என தியேட்டரிலேயே இளன் மற்றும் கவின் உள்ளிட்ட படக்குழுவினர் கேட்டுக் கொண்ட நிலையில், படத்தை பார்த்த யாருமே அதை ரிவீல் செய்யவில்லை. யுவனின் மேஜிக், பிரபலம் ஒருவர் வரும் மாஸான சீன் மற்றும் இன்னொரு சூப்பர் சர்ப்ரைஸ் என 3 விஷயங்கள் நிச்சயம் படம் பார்க்கும் அனைத்து ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தும். யுவன் தான் பெரிய பிளஸ்: ஸ்டார் படம் இந்த அளவுக்கு பெரிய படமாக மாற முக்கிய காரணமே யுவன் சங்கர் ராஜா தான். பின்னணி இசையில் பல ஸ்லோவாக நகரும் காட்சிகளையும் எந்தளவுக்கு ஹோல்ட் பண்ண முடியுமோ அந்தளவுக்கு ஹோல்ட் செய்கிறார். படத்தில் உள்ள யுவனின் அந்த சர்ப்ரைஸ் நிச்சயம் ஒட்டுமொத்த தியேட்டரையும் உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. கடைசி கிளைமேக்ஸ் காட்சியிலும் யுவன் சங்கர் ராஜா தனது இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
எந்தளவுக்கு அழகான ஹீரோவாக ஆரம்பத்தில் கவின் வருகிறாரோ அந்த விபத்துக்கு பிறகு அவரது தோற்றம் முற்றிலுமாக மாறுகிறது. இதற்கு மேல் இவன் எப்படி ஹீரோவாக போகிறான் என்கிற கேள்வியை ரசிகர்களுக்கு எழுப்ப அதை தொடர்ந்து வரும் ஒவ்வொரு சிக்கலையும் கடைசி வரை கவின் எப்படி ஃபேஸ் பண்ணுகிறார் என்பதை நடிப்பில் காட்டி கலங்கடிக்கிறார். முதல் பாதி முழுக்க க்யூட்டாக வரும் கவின் இரண்டாம் பாதியில் நடிகராக நிமிர்ந்து நிற்கிறார். மும்பையில் காசு இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு ஏகப்பட்ட வேலைகளை செய்யும் அந்த போர்ஷன் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. அதே போல கல்லூரியில் பெண் வேடமிட்டு கவின் நடனமாடுவதற்கு பின்னணியில் உள்ள விஷயமும் அந்த நடனம் ஆடிவிட்டு கவின் பேசும் வசனங்களுக்கு நிச்சயம் பெண் ரசிகைகள் விசிலடித்து கொண்டாடுவார்கள் என்பது கன்ஃபார்ம். காதல் சுகுமார் கதாபாத்திரம்: கருப்பா இருக்குறவன்லாம் வடிவேலு போல மாற முடியாது என காதல் சுகுமார் சொல்லும் காட்சியும் சினிமாவில் சிலர் 100 கோடி நாயகர்களாக உள்ள நிலையில், அதே சினிமாவை நேசித்த சிலர் தெருவில் அநாதை பிணங்களாக கிடக்கும் அவலத்தையும் ஸ்டார் படம் எடுத்துக் காட்டி பயமுறுத்துகிறது.
ஸ்டில்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் லால் முதல் சீனில் மீசையை தொலைத்து விட்டு மகனுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லிக் கொடுக்கும் காட்சியில் இருந்து ஒரு கட்டத்தில் உன்னால சாதிக்க முடியாது, நீ தோத்துட்டடா என சொல்லும் காட்சி வரைக்கும் அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
காசுக்கே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஹீரோவாக போராடும் போது அவனுக்கு எதிராக வரும் அத்தனை தடைகளையும் அவன் எப்படி எல்லாம் சமாளித்து தனக்குள் எரிந்துக் கொண்டிருக்கும் லட்சிய தீயை அணைய விடாமல் அதற்குள் செல்ல முடியாமல் தவிக்கும் இடங்களிலும் கிடைக்க வேண்டிய விஷயம் கண்டிப்பா கிடைக்கும் என்பதை கிளைமேக்ஸில் சொல்லி இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பும் படமாக ஸ்டார் உள்ளது.