Now Reading
டவலுடன் இருந்த ஃபோட்டோ குறித்து சமந்தா விளக்கம்

டவலுடன் இருந்த ஃபோட்டோ குறித்து சமந்தா விளக்கம்

நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்ட அவர்; சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் சமந்தா; வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும்.சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
சமந்தா டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். நாக சைதன்யாவின் குடும்பம் பெரியது என்பதால் அவர்கள் சமந்தா – நாக சைதன்யாவின் காதலை திருமணம்வரை சென்று சேர்ப்பார்களா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது. ஆனால் நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள்.
திருமண முறிவுக்கு பிறகு ஒரு பாடலில் நடனம் ஆடிய சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி படங்களின் ரிசல்ட் அமையவில்லை. முக்கியமாக சாகுந்தலம் படம் பலத்த அடி வாங்கியது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படம் என்ற பெயரையும் அப்படம்தான் பெற்றது. குட்டி ரெஸ்ட்: சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சமந்தா அறிவித்தார். அறிவித்தது மட்டுமின்றி படங்களுக்காக தான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையையும் அந்தந்த தயாரிப்பாளர்களிடம் முறைப்படி திருப்பி அளித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். சமந்தாவுக்கு மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது அதற்கான சிகிச்சைக்காகத்தான் அவர் சினிமாவிலிருந்து குட்டி ரெஸ்ட் எடுத்திருக்கிறார் என்றனர் திரைத்துறையினர்.

நிலைமை இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் சமந்தா வெறும் டவலுடன் இருப்பது போன்று இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் சமந்தாவுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி, இது மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையா என்றும் கேட்டுவந்தனர். ஆனால் அந்தப் புகைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே டெலிட்டும் செய்யப்பட்டது. சமந்தா விளக்கம்: இந்நிலையில் சமந்தா தற்போது ஒரு வாசகத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், ’உண்மையான பலம் என்பது உங்களை நிரூபிப்பதோ, நியாயப்படுத்துவதோ இல்லை’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கின்றனர். தற்போது அந்த வாசகமும் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அந்தப் புகைப்படத்துக்காகத்தான் சமந்தா இந்த வாசகத்தை பகிர்ந்திருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)