Now Reading
மேக்கப் இல்லாமலும் தேவதை மாதிரி தா இருக்காங்க…ட்ரெண்ட் ஆகும் அஞ்சலி போட்டோஸ்

மேக்கப் இல்லாமலும் தேவதை மாதிரி தா இருக்காங்க…ட்ரெண்ட் ஆகும் அஞ்சலி போட்டோஸ்

நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்து தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படம் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் மேக்கப் இல்லாமல் அஞ்சலி இருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படம் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுவருகிறது. படம் மட்டுமின்றி அதில் நடித்த அஞ்சலிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.
இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அழகு மட்டுமின்றி திறமையான வெகு சில நடிகைகளில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் அவர்.
ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து ரசிகர்களை கவர்ந்த அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக திரையுலகிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்று நடனம் ஆடி; அதனையடுத்து ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை.
இந்த சூழலில் மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் தெலுங்கிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்தார். மேலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தமிழில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். கற்றது தமிழ் எப்படி அஞ்சலிக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததோ அதேபோல் இந்தப் படமும் பெரும் அடையாளமாக மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முக்கியமாக அஞ்சலி பார்த்த ரசிகர்கள் அவரின் ரீ எண்ட்ரி தரமாக இருக்கும் என்பதை இந்த க்ளிம்ப்ஸும், அஞ்சலியின் அழகும் உணர்த்துவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் பெரும்பாலும் மேக்கப்புடன் பொது வெளியில் காட்சியளிக்கும் அஞ்சலி இப்போது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களில் அஞ்சலி துளிகூட மேக்கப் இல்லாமல் சுடிதாரில் இருக்கிறார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அட மேக்கப் இல்லாமலும் தேவதை மாதிரி இருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்து அப்புகைப்படங்களை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)