சிம்பு தந்த பலகோடி ஹன்ஷிகா விற்கு..என் முதல் காதல் என்ற ஹன்ஷிகா.
வாலு படத்தில் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்ததாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதால், ஹன்சிகா, தனது நீண்டநாள் நண்பர் சோஹேல் கத்தூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், சிம்பு ஹன்சிகாவை காதலித்த போது, அவருக்காக பல கோடியை செலவு செய்தார் என்று பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் மொழிப்படங்களில் டாப் நடிகையாக இருக்கும் ஹன்சிகா தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்ட ஹன்சிகா இப்படத்தின் வெற்றிக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். இதைத் தொடர்ந்து, தனுஷ்,ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்தார்.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவருக்கு, திடீரென, பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி, மேன் என தமிழில் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.
இந்நிலையில், சினிமா மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன், ஹன்சிகா – சிம்பு காதல் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்த போது சிம்பு, ஹன்சிகாவுக்காக 6 கோடிக்கு மெல் செலவு செய்திருக்கிறார். ஆனால், காதல் எந்த காரணத்திற்காக பிரிந்தது, இருவரும் ஏன் பிரேக்கப் செய்து கொண்டார்கள் என்று தெரியாது. இருவரும் பிரிந்ததற்கு பின் ஹன்சிகாவை பற்றி அவர் எங்கும் தவறாக பேசியதில்லை என்றார்.
ஆனால், ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா படத்தில் ஹன்சிகா கேட்டுக்கொண்டதற்காகவே அந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இதை ஹன்சிகாவே ஒரு பேட்டியில் சொல்லி பெருமைப்பட்டார். பிரேக்கப்பிற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்த படம் என்பதால், இந்த படம் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாது, ஆனால்,படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதை இல்லாததால், படம் தோல்வி அடைந்தது என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. இதில், தனது முந்தைய காதல் குறித்து ஹன்சிகா பேசி இருந்தார். நான் ஏற்கனவே பொதுமக்களின் பார்வையில் ஒரு உறவில் இருந்துள்ளேன். நான் அதை மீண்டும் செய்ய விரும்பவில்லை. ஆனால் அது மீண்டும் எனக்கு திடீரென நிகழ்ந்தது. மீண்டும் ஊர் அறிய ஒருவருடன் உறவில் செல்வதென்றால், அது நான் திருமணம் செய்து கொள்ளும் நபராக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என சிம்புவுடனான காதல் குறித்து மறைமுகமாக கூறிருந்தார்.