வசூலை குவித்த ரீ ரிலீஸ் படம் கில்லி…
தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் பலமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் ஒவ்வொரு முறையும் சன் டிவியில் கில்லி படம் ஓடினாலும் சோஷியல் மீடியாவில் அது ட்ரெண்ட் ஆகிவிடும்.இந்நிலையில், தியேட்டரில் கடந்த சனிக்கிழமை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் வசூலில் இந்த ஆண்டு வெளியான புதிய தமிழ் படங்களை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளி வருகிறது.
சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் மட்டுமின்றி திங்கட்கிழமை ஆனா நேற்று கில்லி படத்துக்கு பல திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தற்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கில்லி படத்தை அந்தப் படத்தில் நடித்த கராத்தே ராஜா, அம்மாவாக நடித்த ஜானகி கணேஷ், இயக்குநர் தரணி உள்ளிட்ட பலரும் மாவீரன் படத்தில் தங்கையாக நடித்த மோனிஷா, தேவதர்ஷினியின் மகள் நியதி உள்ளிட்ட பலர் தியேட்டரில் படத்தை பார்த்து ஆட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கில்லி படம் முதல் நாளில் உலகளவில் 8 முதல் 10 கோடி வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் கில்லி படம் ஈட்டியது. 2ம் நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் 3.5 கோடி வசூலை கில்லி படம் ஈட்டிய நிலையில், ஒட்டுமொத்தமாக 12 முதல் 13 கோடி வசூலை ஈட்டியது. திங்கட்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் கில்லி திரைப்படம் 1.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். இதுவரை உலகளவில் கில்லி திரைப்படம் 15 முதல் 16 கோடி வசூலை ஈட்டி அசத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட் எதிர்பார்ப்பு எகிறுது: மீண்டும் கில்லி படம் வெளியாகி ரசிகர்களை தியேட்டர்களுக்கு கொண்டு வரும் நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. புஷ்பா 2, கல்கி உள்ளிட்ட படங்கள் ப்ரீ பிசினஸில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், கோட் படத்தின் ப்ரீ பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர். கில்லி அளவுக்கு கோட் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் படமாக வரவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்த படத்தில் பல புதிய எக்ஸ்பீரிமென்ட்களை விஜய்யை வைத்து வெங்கட் பிரபு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.