சின்ன தளபதி பட்டத்திற்கு பதில் அளித்த பரத்;இயக்குனர் மீது தான் மிஸ்டேக்கே …
பரத் நடிப்பில் அடுத்ததாக ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்துக்கான புரமோஷன் வேலைகளை துவங்கி உள்ள பரத் யூடியூப் சேனல்களுக்கும் மீடியாக்களுக்கும் பேட்டியளித்து வருகிறார். அவர் அளித்த புதிய பேட்டியில் ‘சின்ன தளபதி’ பட்டம் என்ன ஆனது? ஏன் இப்போதெல்லாம் பயன்படுத்தவில்லை என்பதற்கும் அவரது படங்கள் சொதப்ப என்ன காரணம் என்பதற்கும் பதிலளித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து அசத்தியவர் பரத். விஷால் அறிமுகமான செல்லமே படத்தில் வில்லனாக நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டியிருப்பார். ஷங்கரின் உதவி இயக்குநரான பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் பரத்.
விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என பேக் டு பேக் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பேரரசு இயக்கத்தில் பழநி படத்தில் பரத் நடித்த நிலையில், அவருக்கு சின்ன தளபதி என்கிற பட்டத்தை பேரரசு சூட்டினார். அந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் காஜல் அகர்வால் அறிமுகமானார்.
‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தில் பரத் ஆட்டோக்காரனாக நடித்திருக்கிறார். ஒரு பிஸ்டல் எப்படி கதை முழுக்க அனைவரிடமும் பயணிக்கிறது. அது ஹீரோவின் வாழ்க்கையில் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது என்கிற கதையுடன் விறுவிறுப்பாக உருவாகி உள்ளபடத்தில் நடித்திருக்கிறேன் என பரத் கூறிய நிலையில், சின்ன தளபதி பட்டத்தை சமீப காலமாக பயன்படுத்தவில்லையே ஏன்? என்கிற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பரத்.
சில உச்ச நட்சத்திரங்களை தவிர்த்து பல பெரிய நடிகர்கள் பட்டங்களை எல்லாம் படங்களில் போட்டுக் கொள்வதில்லை. சின்ன தளபதி பட்டம் பயன்படுத்திய படங்கள் நல்லாவே ஓடின. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், பட்டம் எல்லாம் பயன்படுத்துவது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதனால் தான் அதை தூக்கி விட்டேன் என பதில் அளித்துள்ளார்.
காளிதாஸ் திரைப்படம் பரத்துக்கு கடைசியாக நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடித்த மிரள், லவ் உள்ளிட்ட பல படங்கள் ஓடவில்லை. இந்நிலையில், மறுபடியும் கடைசி பெஞ்ச் கார்த்திக் படத்தின் கதையை நம்பித்தான் நடிக்கப் போனேன். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் இயக்குநர் படத்தை சொதப்பி விட்டார். சரியாக அவரால் அந்த கதையை இயக்க முடியாத நிலையில், படத்தில் கமிட் ஆகிட்டோம் காசுக்காக நடிக்க வேண்டியது தான் என நடிக்க ஆரம்பித்து விட்டேன். நிறைய நடிகர்கள் கமிட்டான படங்களில் இருந்து விலகாமல் தான் நடிப்பார்கள். ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை நல்ல ஸ்க்ரிப்ட் தான். ஆனால், அதை சுந்தர். சி சார் போல ஒருவர் இயக்கியிருந்தால் வேற லெவலில் ஓடியிருக்கும் அந்த படம் ஃபிளாப் ஆக காரணமும் இயக்குநர் தான் என டைரக்டர்கள் தான் தனது படங்கள் சொதப்ப காரணம் எனக் கூறியிருக்கிறார்
பரத்.