ரத்தமும் சதையமா இருந்துட்டு இந்த அஞ்சு பேரு சாவுக்கு கூட போகாத வடிவேலு.. விஜயகாந்த் ஆல் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி
by Admin
0
Shares
இறுதி அஞ்சலி என்பது கடைசியாக செலுத்தும் அஞ்சலி அல்ல இதய அஞ்சலி என்று குறிப்பிட்டு இருப்பார் நடிகர் பார்த்திபன். நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் உலகை விட்டு செல்லும்போது ஆத்மார்த்தமாக அவரின் நினைவுகளை பகிர்வதே ஆகும். ஆனால் காமெடி நடிகர் வடிவேலு அவர்கள் தன்னுடன் நன்றாக பழகியவர்களுக்கு கூட இறுதி அஞ்சலி செலுத்தாதது பலரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
விஜயகாந்த்: தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட வடிவேலுவின் ஆரம்ப காலங்களில் வாய்ப்பும் கொடுத்து வாழ்க்கையும் கொடுத்த விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு செல்லாதது. விஜயகாந்தின் ரசிகர்களை தாண்டி சினிமா ஆர்வலர்கள் பலரையும் கொந்தளிக்க செய்தது.
விவேக்: தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில்க்கு பின் விவேக் வடிவேல் கூட்டணி 90ஸ் காலகட்டத்தில் கொஞ்சம் தூக்கலாக இருந்தது இவர்கள் இணைந்து நடித்த விரலுக்கேத்த வீக்கம், மிடில்கிளாஸ் மாதவன், மனதை திருடி விட்டாய் போன்ற படங்கள் காமெடிக்காகவே ஹிட் அடித்தது. திடீரென்று இறந்த விவேக்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாமல் இரங்கல் வீடியோ போட்டு முடித்துக் கொண்டார் வடிவேலு.
மயில்சாமி: காமெடி நடிகர் மயில்சாமியின் இரங்கலுக்கு சூப்பர் ஸ்டார் முதல் ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை பலரும் பங்கேற்றனர். சக மனிதனை மனிதனாக மதிக்க தெரியாதவன் என்ன மனிதன் என்பது போல் தலைக்கனத்தில் தள்ளாடி கொண்டிருக்கும் வடிவேலு இரங்கல் வீடியோ கூட போடாமல் கல் மனதுடன் இருந்து விட்டார்.
மனோபாலா : வடிவேலு சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் மனோபாலா உடன் இணைந்து நடித்திருந்தாலும் இவர்களுக்குள் சிறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மனோபாலாவின் இறப்பிற்கு வராமல் பேட்டி ஒன்றில் நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் என்று கண்ணீர் அறிக்கை வாசித்தார்.
போண்டா மணி: வடிவேல் உடன் மருதமலை, சுந்தரா ட்ராவல்ஸ் என பல படங்கள் நடித்த நிலையில் போண்டாமணி அவர்கள் உடல்நிலை சரியில்லாத போது உதவி செய்யுமாறு நேரடியாகவே வடிவேலிடம் கோரிக்கை வைத்தார். வடிவேல் அவர்கள் இதனை கண்டு கொள்ளவும் இல்லை அவரது இறப்புக்கு பின்னும் எட்டிக் கூட பார்க்காமல் இருந்து விட்டார் இந்த கலியுக கர்ணன்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0