Now Reading
அநீதி விமர்சனம்

அநீதி விமர்சனம்

அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியுள்ளார், கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் அவரது குரலுக்காகவே அதிக ரசிகர் பட்டாள்கள் உள்ளது.  கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாகவும், அந்தகாரம் படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்த அர்ஜுன் தாஸ் அநீதி படத்தின் மூலம் ஒரு முழு நீர ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார்.  வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது, மேலும் வசந்தபாலனின் படம் என்பதாலும் எதிர்பார்ப்பு பெருகி இருந்தது.  ஜிவி பிரகாஷ் இசையமைக்க எம்.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.  அநீதி படத்தில் அர்ஜுன் தாஸ் திருமேனி என்ற கதாபாத்திரத்திலும், துஷாரா விஜயன் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  மேலும் காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி, சாரா, அறந்தாங்கி நிஷா, சிவா போன்ற பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் திரு.  அவருக்கு யாரைப் பார்த்தாலும் கொள்ளணும் என்கின்ற ஒரு மனநோய்யில் அவதிப்பட்டு வருகிறார்.  இந்த நிலையில் சுப்புலட்சுமியை பார்த்ததும் அவருக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது.  சுப்பு ஒரு பணக்கார வீட்டில் வயதான பாட்டியை பார்த்துக் கொள்ளும் வேலை பார்த்து வருகிறார்.  அவர்களது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர்.  எதிர்பாராத விதமாக அந்த பாட்டி இறந்துவிட அதன் பிறகு என்ன ஆனது என்பதே அநீதி படத்தில் கதை.

வழக்கம்போல வசந்தபாலன் ஒரு எளிய மக்களின் கதையை படமாக எடுத்துள்ளார்.  எந்தவித சினிமா தனமும் இல்லாத ஒரு எதார்த்தமான திரை கதையின் மூலம் மீண்டும் அசத்தியுள்ளார்.  வில்லனாக மிரட்டி இருந்தாலும் அர்ஜுன் தாஸ் அநீதி படத்தில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  ஒரு முழு நீள படத்தை தாங்கி பிடிக்கும் அளவிற்கு ஒரு தேர்ந்த நடிகராக மாறி உள்ளார்.  எமோஷனல் காட்சிகளிலும் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார்.  துஷாரா விஜயன் நம் பக்கத்து வீட்டு பெண் போல் தனது நடிப்பால் உணர்த்துகிறார்.  இரண்டாம் பாதி முழுக்கவே அழுது கொண்டும், என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடும் அந்த முகபாவனையும் சுப்பு என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இரண்டாம் பாதியில் சிறிது நேரமே வரும் காளி வெங்கட் கண்கலங்க வைக்கிறார், அவருக்கும் சின்னப் பையனிற்கும் இடையே இருக்கும் அன்பு அனைவரையும் ஈர்க்கிறது. சாரா மற்றும் பரணி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளனர்.  வனிதா விஜயகுமார் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் கதையில் என்ட்ரி ஆன பின்பு திரைக்கதை சூடு பிடிக்கிறது.  பணக்காரர்கள் ஏழை மக்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை வசந்த பாலன் அநீதி படத்தின் மூலம் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.

See Also

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும் கதைக்கு தேவையானது போல் இருந்தது.  அதிகாரம் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுசன் இல்ல போன்ற எஸ் கே ஜீவாவின் வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)