டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது.

இயக்குநர் ஓம் ராவத்- தயாரிப்பாளர் பூஷன் குமார் -நட்சத்திர நடிகர் பிரபாஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’, டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுவதன் மூலம் இந்திய சினிமா, உலக அரங்கில் தன்னுடைய அடுத்த கட்ட முன்னகர்வை முன்னெடுத்திருக்கிறது.

பிரம்மாண்டமான படைப்பாக தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ விரைவில் வெளியாகவிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குநரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் காவியமாக கருதப்படும் ராமாயணத்தை தழுவி உருவாகி இருக்கிறது. இதனைக் காண ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரித்திருக்கும் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மகத்துவத்தைக் கொண்ட ‘ஆதி புருஷ்‌’ படத்தை, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகமே காணவிருக்கிறது என டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா குழு அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியுயார்க் எனும் நகரில் ஜூன் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் 22 ஆவது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் உலகளாவிய பிரத்தியேக காட்சி திரையிடப்படுகிறது. ‘ஆதி புருஷ்’ திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவிலும், உலகளவிலும் வெளியாகிறது.

அண்மையில் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவிற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தினை உலகளாவிய பிரத்யேக காட்சியாக திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகர்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேக் ஹாட்காஃப் ஆகியோரால் OKX நிறுவப்பட்டது. இதன் சார்பாக நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் கலைஞர்கள் மற்றும் பலதரப்பட்ட பார்வையாளர்களை ஒன்றிணைத்து, கதை சொல்லல் மற்றும் திரைப்படத்தின் அனைத்து வடிவங்களையும் கொண்டாடுகிறது. திரைத்துறையின் வலுவான வேர்களைக் கொண்டிருப்பதால், இந்த விழாவில் இடம்பெறும் படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தரமான பொழுதுபோக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. காட்சி விருந்தாக அமைந்திருக்கிறது என கருதப்படும் ‘ஆதி புருஷ்’, முப்பரிமாண வடிவில் இரவு நேர பிரத்யேக காட்சியாக இந்த விழாவில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ உலகத்தை தனதாக்குகிறார். இது இந்திய சினிமாவிற்கு ஏற்ற நல்ல தருணமாக கருதப்படுகிறது.

இந்த அற்புதமான சாதனை குறித்து இயக்குநர் ஓம் ராவத் பேசுகையில், ” ஆதி புருஷ் ஒரு படம் அல்ல. இது ஒரு உணர்ச்சி. ஒரு உணர்வு !. இந்தியாவின் உணர்வை எதிரொலிக்கும் கதையைப் பற்றிய எங்களது பார்வை. உலகின் மதிப்பு மிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான டிரிபெகா நடுவர் குழுவால் ‘ஆதி புருஷ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது… ஒரு மாணவனாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன். டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக திரையிடல், எனக்கும் என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் நமது கலாச்சாரத்தின் மிகவும் வேரூன்றிய ஒரு கதையை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறோம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஆதி புருஷை கண்டு ரசிக்கும் பார்வையாளர்களின் எதிர்வினையைக் காண்பதற்கு உற்சாகமாக காத்திருக்கிறோம்” என்றார்.

இது தொடர்பாக டி சிரீஸின் தயாரிப்பாளர் பூஷன் குமார் பேசுகையில், ” இந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்வது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா- உலகளவில் மதிப்புமிக்க பாராட்டப்படும் தளங்களில் ஒன்று. இங்கே திரையிடுவதற்கு எங்களுடைய ‘ஆதி புருஷ்’ தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு கடும் உழைப்பு மட்டுமல்ல.. இந்திய வரலாற்றின் சித்தரிப்பு இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது. இது உற்சாகமான தருணங்கள். ஆதி புருஷ் அனைவருக்கும் ஒரு அற்புதமான காட்சி விருந்தாக அமையும். மேலும் இது உலகளாவிய பார்வையாளர்களை மயக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

இது தொடர்பாக நடிகர் பிரபாஸ் கூறுகையில், ” நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஆதி புருஷின் உலகளாவிய பிரத்யேக காட்சியை காண்பதில் பெருமிதம் அடைகிறேன். நமது தேசத்தின் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் திட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். நமது இந்திய திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை பொருத்தவரை ஆதி புருஷ் சர்வதேச அளவிலான அரங்குகளை சென்றடைந்ததை …ஒரு நடிகனாக மட்டுமின்றி, ஒரு இந்தியனாகவும் என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. டிரிபெகாவில் பார்வையாளர்களின் வரவேற்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

See Also

‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸ் கிருத்தி சனோன் ஸன்னி சிங் சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை டி சிரீஸ் பூசன் குமார் மற்றும் கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா குறித்து….

OKX வழங்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா – திரைப்படங்கள், தொலைக்காட்சி, இசை, ஒலி வழியாக கதை சொல்லல், விளையாட்டு மற்றும் XR உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் கதை சொல்வதை கொண்டாட… கலைஞர்கள் மற்றும் பலதரப்பட்ட பார்வையாளர்களை ஒன்றிணைக்கிறது. திரைப்படத் துறையின் வலுவான வேர்களைக் கொண்டுள்ள டிரிபெகா படைப்பு வெளிபாடு மற்றும் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. டிரிபெகா- வளர்ந்து வரும் மற்றும் விருது பெற்ற திறமையாளர்களை கண்டறிதல், புதுமையான அனுபவங்களையும் கண்டறிதல், பிரத்தியேக பிரிமீயர்ஸ், கண்காட்சிகள், உரையாடல்கள், நிபுணர்களின் விவாதங்கள், நேரலைகள் போன்ற வடிவங்களின் மூலம் புதிய திட்டங்களை… ஆலோசனைகளை.. அறிமுகப்படுத்துகிறது. உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மன்ஹட்டன் நகரில் பொருளாதார மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை தூண்டுவதற்காக 2001 ஆம் ஆண்டில் ஹாலிவுட் நட்சத்திரங்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேட் ஹாட்காஃப் ஆகியோரால் இந்த விழா அமைப்பு நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழா, அதன் 22 ஆவது ஆண்டு விழாவினை ஜூன் ஏழாம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நியூயார்க் நகரில் கொண்டாடுகிறது. 2019 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் முர்டோக்கின் ‘லூபா சிஸ்டம்ஸ்’, டிரிபெகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி, ரோசெண்டல், டி நீரோ மற்றும் முர்டோக் ஆகியோரை ஒன்றிணைத்து நிறுவனத்தை வளர்ச்சி அடைய செய்துள்ளது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)