Now Reading
N4 விமர்சனம்

N4 விமர்சனம்

இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் N4. இந்த படத்தில் மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், கேப்ரில்லா, அழகு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி. பாலசுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார்.

படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நாவருமே பெற்றோர் இல்லாமல் அனாதையாக இருக்கிறார்கள். இவர்களை சிறுவயதிலேயே வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். இவர்களை இவர்கள் வளர்ந்து சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அப்போது கல்லூரி மாணவரான அக்ஷய் கமல் தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருப்பார்.அந்த பகுதியில் N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் பணியாற்றி இருக்கிறார். இப்படி எல்லோருமே ஒரே பகுதியை சேர்ந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல் தான் சேர்ந்திருந்தாலும் இப்படி இருக்கும் நிலையில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் சந்திக்கும் நிலைமை ஏற்படுகிறது. அந்த சம்பவம் என்ன? அதனால் யார் யாருக்கு எந்தெந்த பிரச்சனைகள் ஏற்பட்டது? அதிலிருந்து தப்பித்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அதே போல் கேப்ரில்லா, வினுஷா தேவி இந்த படத்தின் மூலம் தங்களுடைய திறமையை இந்த இருக்கிறார்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களை இயக்குனர் தேர்வு செய்திருப்பது சிறப்பான ஒன்று. மேலும், படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சில கதாபாத்திரங்களும் அதில் நடித்து இருக்கும் இளைஞர்களும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
1
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)