‘புரியாத புதிர்’ ‘ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மைக்கேல்’; தமிழில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து கவனம் சந்தீப் கிஷன் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய்சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கெளசிக் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘கைதி’,‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற சாம் சி எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
எல்லாம் வழக்கமான பழிவாங்கல் கதைதான். ஆனால் பழிவாங்கியதோடு நிற்காமல் கொலைப் பட்டியல் நீள்கிறது. படமும் நீள்கிறது. எல்லாச் சம்பிரதாயங்களும் முடிய இரண்டரை மணி நேரங்கள் ஆகின்றன. உபயம்: படம் நெடுக மாஸ் ஏற்றுகிறேன் என எல்லோருக்கும் வைத்த ஸ்லோமோஷன் ஷாட்களும், படத்தின் நீளத்தை விடவும் நெடு நேரம் ஒலிக்கும் பின்னணி இசையும்தான்.
மைக்கேலாக நிவின் பாலி. தொடர் தோல்வி அல்லது சுமாரான படங்கள் என்று வரும்போது அனைத்து முன்னணி நடிகர்களும் கையில் எடுக்கும் முதல் ஆயுதத்தை மனிதரும் எடுத்திருக்கிறார். மாஸ் ஏற்றும் ஆக்ஷன் படம். இங்கே கொஞ்சமே கொஞ்சம் த்ரில்லும் சேர்த்திருக்கிறார்கள். வழக்கத்துக்கு மாறாகச் சற்றே பருமனாக இருக்கிறார். ஆனால், ஃப்ளாஷ்பேக்கில் வரும் கல்லூரிப் பருவத்தில்கூட அப்படியே வருவதுதான் உறுத்துகிறது.
மஞ்சிமா மோகன் படத்தில் இருக்கிறார் அவ்வளவே! இறுதியில் நிவின் பாலி தன் குடும்பத்தை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பாதுகாப்பான இடம் வேண்டுமே… அதற்கு மஞ்சிமா வீடு சரியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே அவர் பாத்திரம் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதுபோல! அதுபோக படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள்.
கொடூர வில்லனாக நடிகர் சித்திக். பாடல்கள் பாடிக்கொண்டே திட்டம்போட்டுக் கொல்லும் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். அவர் அத்தனை மிரட்டலான வகையில் நிவின் பாலியின் குடும்பத்தைப் பின்தொடர்ந்து வந்து வார்னிங் செய்துவிட்டுச் சென்ற பிறகும், அதே காட்சியின் நீட்சியாக கிறிஸ்துமஸ் கேக் வாங்க தன் தாயை நிவின் பாலி கடையில் ட்ராப் செய்துவிட்டுப் போவதெல்லாம் இந்த உலகத்தில் யாருமே செய்ய மாட்டார்கள்.
மற்றொரு முக்கிய வில்லனாக உன்னி முகுந்த். சமாதானம் பேச வந்த இடத்தில் வதம் செய்வது, அடுத்தவரை மிரட்ட அவர்கள் வீட்டில் ஷார்ட்ஸுடன் ஷவரில் குளிப்பது, மிரட்டுவதற்காகவே வந்துவிட்டு, சரி வந்துவிட்டோமே என உடல் உறுப்புத் தானத்துக்குக் கையொப்பம் இட்டுச் செல்வது என `ஏன்னா இப்படி?’ எனக் கேட்க வைக்கும் குழப்பமான பாத்திரம்தான். ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரின் மகனாக வரும் வில்லன் பாத்திரங்கள், பெரிய சண்டை நடக்கையில் குறுக்கே வரும் `கலகலப்பு’ மனோபாலாவை ஏனோ நினைவூட்டுகின்றன.
பாலியல் ரீதியாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது அவர்களுக்கு மனரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தம் என்று பதிவு செய்ததற்காகவும், இயற்பியல் விதிகளை அவ்வப்போது கேள்வி கேட்டாலும் நிவின் பாலியின் கம்பேக் ஆக்ஷன் அவதாரத்திற்காகவும் நம் பாப்கார்ன்களைச் சிதறவிடுவதில் தவறில்லை. வெல்கம் பேக் நிவின், அரை மனதுடன்!