எஸ்.ஜே. சூர்யாவின் வதந்தி விமர்சனம்
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் லைலாவுடன், சஞ்சனா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் தொடர் வதந்தி. கிரைம் மிஸ்டரி த்ரில்லராக உருவாக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ் சமீபத்தில் அமேசான் ஃபிரைம் ஓடிடியில் வெளியானது.சினிமா படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரிக்கு வந்த பிரபல கதாநாயகி மம்தா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என நினைத்தனர். அது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உண்மை என்னவென்றால் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த வேலோனி (சஞ்சனா) கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.இந்த கொலை வழக்கின் விசாரணையை இன்ஸ்பெக்டர் விவேக் (எஸ்.ஜே. சூர்யா) மேற்கொள்வார்.
முதலில் வேலோனியை திருமணம் செய்ய விரும்பிய விக்னேஷ் கொலையாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மறுபுறம், வேலோனி பலருடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த வழக்கு விவேக்கிற்கு சவாலாக உள்ளது. வேலோனியை கொன்றது யார்? சமூகத்தில் அவளைப் பற்றிய வதந்திகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது? வேலோனி கொலை வழக்கை தீர்க்கும் போது விவேக் என்ன மாதிரியான மோதலைச் சந்திக்கிறார்? என்பது தான் கதை.
முழு தொடரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள தவறான வதந்திகளைச் சுற்றியே உள்ளது. அன்பும், ஆறுதலுக்கும் ஏங்கும் அழகிய பெண்ணுக்கு சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் அர்த்தமுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. உண்மைகள் என்னவென்று தெரியாமல் பொய்ப் பிரச்சாரங்களால் ஏற்படும் தவறான புரிதல்களை சிந்தனையுடன் ஆராயும் தொடர் இது.
பெரும் பாலும் வெப் தொடரின் கதை, மூன்றாவது எபிசோட்டில் தான் தொடங்கும். ஆனால் மாறாக முதல் எப்பிசோட்டில் வெப் தொடர் தொடங்குகிறது. இரண்டாவது அத்தியாயத்தில் விவேக்கின் என்ட்ரியுடன் விசாரணைப் பணியைத் தொடங்கினார்.வேலோனியின் வட்டாரத்திலும், தெரிந்தவர்களிடமும் புதுப்புது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு கதாபாத்திரம் மீதும் சந்தேகம் எழுப்பி, இந்த வரிசையில் உண்மைகளை எப்படி விக்ரம் கண்டு பிடிப்பார் என்பதை இயக்குனர் லூயிஸ் சரியாக கையாண்டு இருக்கிறார்.நண்பன் சொன்ன பொய்யால் காதலியை பிரிந்த விவேக், இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு வேலோனி எந்த ஒரு தவறை செய்து இருக்க மாட்டாள் என நிருப்பிக்க போராடி இருப்பார். குடும்ப ரீதியில் அவர் சந்திக்கும் பிரச்னைகள் அங்கமாக வெளிப்படுகிறது. கதையின் கடைசியில் கொலையை செய்தது யார் என்று சர்ப்ரைஸ் ட்விஸ்ட் கொடுத்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
விவேக் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தார். ஒரு அப்பாவி பெண்ணின் தவறு செய்தவனை தண்டிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியாக அவரது நடிப்பு சுவாரஸ்யம். மகளை புரிந்து கொள்ள முடியாத தாயாக லைலா பார்க்கப்படுகிறார். க்ளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்தில் வரும் ட்விஸ்ட் தொடரின் ஹைலைட்.செபாஸ்டியன் என்ற எழுத்தாளராக நாசர் தோன்றினார். பழக்கமான கேரக்டராக இருந்ததால் எளிமையாக அழகாக நடித்து இருப்பார். வேலோனியாக சஞ்சனாவும், ராமராக விவேக் பிரசன்னாவும் சிறப்பாக நடித்துள்ளனர். சைமன் கே கிங்கின் பின்னணி இசை தொடரின் சஸ்பென்ஸ் உணர்வை மேலும் உயர்த்துகிறது.சிந்தனையைத் தூண்டும் மர்மத் திரில்லராக, வதந்தி ஒரு புதிய உணர்வைக் கொண்டுள்ளது.
Acting
Direction