GOLD விமர்சனம் இதோ
கேரள மாநில ஆலுவாவில், பெரியாற்றங்கரையில், தன் அம்மாவுடன் வசித்து வருகிறார் ஜோஷி. மொபைல் ஷாப் ஓனரான ஜோஷிக்கு, திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள். திடீரென்று ஒரு நாள் இரவு, அவரின் வீட்டு வாசலில் மர்மமான ஒரு பொலீரோ லோட் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த காரில் என்ன இருக்கிறது, அது ஜோஷின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது, அந்த காரின் உரிமையாளர் யார் போன்ற கேள்விகளுக்கான பதிலை, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனக்கே உரிய ‘ஃப்லீம் மேக்கிங்’ ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.
ஆற்றங்கரையில் ஒரு வீடு, ஒரு காவல்நிலையம், ஒரு பொலீரோ லோட் கார், ஒரு சின்ன சந்து. இவற்றில் மட்டுமே பயணிக்கும் திரைக்கதையில், ஷோஜியாக வரும் பிரித்விராஜ்தான் படம் நெடுகிலும் நிறைந்திருக்கிறார். பதற்றம், சந்தோஷம், சோகம் என திரைக்கதையில் உள்ள எல்லா உணர்ச்சித் தருணங்களும் ஜோஷியின் கதாபாத்திரம் வழியாகவே கடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் பிரித்விராஜ் கவர்ந்திழுக்கிறார்.
பலவீனமான கதைதான் என்றாலும், முதற்பாதியில் திரைக்கதை அழகாகவும் நிதானமாகவும் சில இடங்களில் அட்டகாசமாகவும் செல்கிறது. எழுத்து மட்டுமின்றி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என எல்லாமும் சேர்ந்தே ‘கோல்ட்’டின் திரைக்கதையாக உருவாகியிருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் பாபுராஜ் ஜேக்கப், காவலர் சபரீஷ் வர்மா, ஜோஷியின் அம்மாவாக வரும் மல்லிகா சுகுமாரன், சஞ்சு க்ரூப் ஆகிய நால்வரும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள். இவர்களின் எதார்த்தமான ஒன் லைன் காமெடிகள் சிரிப்பைத் தருகிறது. அதேபோல், காவல்நிலையத்தில் உள்ள காவலர்களுடனான உரையாடல்கள், ரவுடிகளுக்கு இடையேயான உரையாடல்கள் சிரிப்பைத் தருகின்றன. ஆனால், காமெடிக்காக வழிந்து திணிக்கப்பட்ட லாலு அலெக்ஸ், அஜ்மல் ஆகியோரின் செயற்கைத்தனமான காமெடிகள் எங்குமே ஈர்க்கவில்லை.
பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் கதாபாத்திரத்தை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. மொத்தமே நான்கு காட்சிகள் மட்டுமே வருகிறார். தலைமைக் காவலராக வரும் மூத்த நடிகரான ஜகதீஸ், ரவுடிகளின் தலைவனாக வரும் செம்பன் வினோத், ரோஷன் மாத்யூஸ், வினய் ஃபோர்ட் ஆகியோர் எந்த அழுத்தமும் தராமல் வந்து போகிறார்கள், இவர்களைக் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
Acting
Story