காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்
இந்த வாரம் புதுமுக நடிகர்கள் நடித்து புதுமுக இயக்குநர் இயக்கிய பழைய பாடல் டைட்டில் கொண்ட காலங்களில் அவள் வசந்தம் படம் வெளியாகி இருக்கிறது.
அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக்கை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் நாயகனுக்கு ஹிரோஷினியுடன் காதல் ஏற்படுகிறது. காதலிக்காக மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.
ஹீரோவுக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டு அறிமுக நாயகன் கெளசிக் இந்த படத்தில் சினிமாவில் ரொம்பவே ஆர்வமுள்ள ஷியாம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை சினிமா படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது எல்லாம் ரொம்பவே புதுசாக உள்ளது. காதலனாகவும் கன்ஃபியூஸ் கணவனாகவும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
குறைவான பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு நல்ல ரிச் லுக்கை கொடுத்துள்ள கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு தான் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. ஹரியின் இசையும் அந்த பப்பாளி பாடலும் ரசிகர்களை இளமை ததும்ப வைத்துள்ளது.
இந்த மாதிரி படங்கள் இதற்கு முன் பல முறை வந்திருந்தாலும் இதுதான் ஃபர்ஸ்ட் என சொல்லப்படும் அளவுக்கு தெரிந்த கதையில் எங்கெல்லாம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும் காதலையும் கொட்ட முடியுமோ இயக்குநர் கொட்டித் தீர்த்து இருக்கிறார். நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு நேர்மையாக நடித்து கொடுத்துள்ளனர். அறிமுக நாயகி ஹிரோஷினி காதல் செய்யும் இடங்கள் எல்லாம் அருமை.
சிம்பிளாக சொல்ல வேண்டிய கதையை ரொம்பவே சுத்தி வளைச்சு சொல்லி இருப்பது சற்றே நெருடலாக உள்ளது. மற்றபடி டார்கெட் ஆடியன்ஸான இளைஞர்களை இந்த படம் நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலங்களில் அவள் வசந்தம் – காதல் நினைவுகள்!
Directon
Acting