விரைவில் திருமணம் செய்யும் ஹன்சிகா?

நடிகை ஹன்சிகாவுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹன்சிகா மோத்வானி அறிமுகமானதில் இருந்தே ரசிகர்களை கவர்ந்தவர். பார்பதற்கு குஷ்புவை போலவே இருந்ததால் ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் சிம்புவை காதலித்து வந்தார் ஹன்சிகா. சில காரணங்களால் இந்த காதல் முறிவில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து சிம்பு சமீபத்தில் ஹன்சிகாவின் மஹா படத்தில் நடித்தார். தமிழில் ஹன்சிகாவின் மார்க்கெட் குறைந்துவிட்டது.  அதனால் அவர் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வர ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் ஹன்சிகாவின் திருமணம் நடைபெறவுள்ளது.

See Also

இந்த அரண்மனை தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஹன்சிகாவின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக அங்கு நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹன்சிகாவை திருமணம் செய்யப்போகும் புது மாப்பிள்ளை யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் ஒரு தொழிலதிபர் என சொல்லப்படுகிறது.

அவரைப் பற்றிய வேறு எந்த தகவலும் இன்றுவரை வெளியாகவில்லை.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)