எமோஜி – விமர்சனம்
மகத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி மற்றும் பலர் நடிக்க ஷென் எஸ்.ரெங்கசாமி இயக்கியுள்ளார் . ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ .எம். சம்பத் குமார் தயாரித்துள்ளார். ஆஹா ஒரிஜினல் ஓடிடி வெளியிடுகிறது. ஒரு காதல் இல்லையேல் அடுத்த காதல். இதுபோன்ற காதல்களை கூறும் காம உணர்ச்சிகரமான படைப்பே இந்த எமோஜி. படம் 18+
மானசா & மகத் இருவரும் காதலர்கள். லவ்வோ லவ்… அப்படியொரு லவ்.. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக மகத்தை பிரிகிறார். இதற்கு நாமே ஒத்துக் கொள்ளும் வகையில் ஒரு காரணத்தை சொல்கிறார்.இவர்களின் எதிர் ப்ளாட்டில் தேவிகா & காதலன். அவர்களை போல லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப்பில் விழுகின்றனர். இதற்கும் நியாயமான ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
பின்னர் அடுத்த காதல்.. அதாவது.. இரண்டு ஜோடிகளில் பிரிந்த ஒரு காதலனும் பிரிந்த ஒரு காதலியும் ஒன்று சேர்கிறார்கள். மகத் & தேவிகா காதலிக்க தொடங்குகின்றனர். இந்த காதல் என்ன ஆனது.? என்பதே மீதிக்கதை.அலட்டிக் கொள்ளாத ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் மகத். யதார்த்த நாயகனாக வலம் வருகிறார். நிறைய காட்சிகளில் சிம்புவை நினைவுப் படுத்துகிறார். அவரின் குரலும் உடல் மொழியும் சிம்பு போலவே பல காட்சிகளில் உள்ளது.
ஒருவேளை இந்த படத்தை சிம்பு நடித்திருந்தால் இந்த கேரக்டருக்கு 100 சதவீதம் பொருத்தமாக இருந்திருப்பார். இந்த படம் வேற லெவலில் பேசப்பட்டு இருக்கும்.தேவிகா & மானசா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ரொமான்ஸிலும் சரி கிளாமரிலும் சரி அடடடா என்ன ஒரு அழகான நடிப்பை கொடுத்துள்ளனர் என்று கூறலாம்.தேவிகா ஒரு படி அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார். அழகான இதழ்கள்.. கண்கள்… க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ்… என வெளுத்து கட்டிவிட்டார். நிற்கும்போது காதலன் தோளின் மேல் தன் காலை தூக்கி வைப்பது.. திடீரென ஓடி வந்து இடுப்பில் ஏறி கொள்வது.. என ரொமான்டிக் வெரைட்டி காட்டி நம்மை மிரட்டி இருக்கிறார் தேவிகா..
இவர்களுடன் சின்ன சின்ன கேரக்டர்களில் வரும் பெற்றோர்கள் & நண்பர்கள் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். இவர்களின் நடிப்பும் பேசப்படும் வகையில் சிறப்பாக உள்ளது.இந்தக் காதல்.. அந்தக் காதல்.. இவர்களின் காமம்.. அவர்கள் காமம் என கலந்து காட்டப்பட்டிருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் உள்ள காதலர்களின் முடிவையே காட்சிகளில் காட்டியிருக்கிறார் டைரக்டர்.
படிப்பு முடித்தவுடன் கை நிறைய வருமானம் வருவதால் இன்றைய இளைஞர்கள் எடுக்கும் திடீர் திடீர் முடிவுகளே இதற்கான காரணம். ஒரு வேலையை உதறிவிட்டு அடுத்த வேலைக்கு செல்வது போல ஒரு காதலை உதறிவிட்டு அடுத்த காதலை தேட ஆரம்பிக்கின்றனர்.இது ஓ டி டிக்கு தயாரான படம் என்றாலும் ஒரு சினிமாவுக்கு நிகராக காட்சி அமைப்புகளும் பாடல் காட்சிகளும் படத்தின் ஒளிப்பதிவும் ஈர்க்கின்றன.சென் ரங்கசாமி் இயக்கியுள்ளார்.
DIRECTOR SEN.S. Rangasamy
PRODUCER A.M Sampath Kumar
DOP Jalandhar Vasan
MUSIC DIRECTOR Sanath Bharadwaj