பொய்க்கால் குதிரை- விமர்சனம்
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பொய்க்கால் குதிரை.
விபத்தில் ஒரு காலை இழந்து தன்னுடைய மகளுடன் வசிக்கிறார் பிரபுதேவா. சாதாரண வேலை செய்தாலும் மகளுடன் மிகிழ்ச்சியாக நாட்களை கடத்துகிறார். ஆனால் அவரின் மகளுக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரி செய்ய உடனடியாக 70 லட்ச ரூபாய் தேவை. பணத்திற்காக பலரிடம் உதவிக்கேட்கிறார். ஆனால் உதவ யாரும் முன்வரவில்லை. இறுதியில் சிறையில் இருக்கும் பிரபுதேவாவின் தந்தை, குழந்தை கடத்தல் திடத்தை போட்டு கொடுக்கிறார். அதை சரியாக செய்தாரா? அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? தன் குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே பொய்கால் குதிரை.
இந்தப் படத்தில் ஆபத்தான சமயத்தில் சில மருத்துவமனைகள் எப்படி நடந்துகொள்கின்றன, சிகிச்சையில் இருப்பவர்களுக்காக சில என்.ஜி.ஓக்கள் பணத்தை வசூலித்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என சில காட்சிகள் காட்சிகளை வைத்துள்ளார் இயக்குநர். இருந்தாலும் அந்த காட்சிகள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
போலி என்.ஜி.ஓ நபர்களிடம் பணத்தை இழந்த பிரபு தேவா, தன் குழந்தையை காப்பாற்ற, தொழிலதிபர் வரலட்சுமியின் குழந்தையை நண்பன் உதவியுடன் கடத்த முயற்சிக்கிறார். அதற்கு பிறகு பல Twist-களுடன் திரைக்கதை நகர்கிறது. ஆனால் அந்த Twist அனைத்தும் யூகிக்கும் படியே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. அது படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளது.
வரலட்சுமி குழந்தையை கடத்த செல்லும் பிரபு தேவா மாட்டிக்கொள்கிறார். அதே குழந்தையை வில்லன் கடத்தி விடுகிறார். அவருடனே இருக்கும் நண்பன் வில்லனுடன் கைகோர்த்துவிடுகிறார். இப்படி படத்தில் நாயகன் தோல்வியடைந்துகொண்டே இருக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. அது படக்குழுவினருக்கு சுவாரஸ்யம் என்று தோன்றினாலும், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் இறுதியில் வில்லனும், ஹீரோவும் மாறி மாறி கதை கூறிக்கொள்கின்றனர். அப்போது படம் முடியப்போகிறது என்ற உணர்வை கொடுக்கிறது.