தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம்
020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த படமாக சூரரைப் போற்று, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதை எழுத்துக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசையமைப்பாளராஜ ஜிவி பிரகாஷ் என சூரறைப் போற்று படம் தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. இதனையடுத்து படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.
சூரறைப் போற்று படம் மட்டுமின்றி, ஸ்பெஷல் ஜூரி விருதுக்கு வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் தேர்வாகியுள்ளது. அதேபோல் சிறந்த துணை நடிகைக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த லட்சுமியும், சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை அந்தப் படத்தை எடிட் செய்த ஸ்ரீகர் பிரசாத்தும் பெறுகின்றனர். மேலும் சிறந்த வசனத்துக்கான விருதை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஷ்வின் பெறுகிறார்.
இந்நிலையில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய் ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அந்த நாள் வந்து சேரும்.
இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. எனது தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் நன்றி. சூரறைப் போற்று படக்குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நாள் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள்” என குறிப்பிட்டுள்ளார்.