Now Reading
LIGER (Saala Crossbreed) திரைப்படத்தின் டிரெய்லர் ஜுலை 21 ஆம் தேதி ஹைதராபாத் மற்றும் மும்பையில் வெளியாகவுள்ளது !

LIGER (Saala Crossbreed) திரைப்படத்தின் டிரெய்லர் ஜுலை 21 ஆம் தேதி ஹைதராபாத் மற்றும் மும்பையில் வெளியாகவுள்ளது !

விஜய் தேவரகொண்டா நடித்த பான் இந்திய மாஸ் பொழுதுபோக்கு எண்டர்டெய்னரான  லிகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படத்தின் டிரெய்லர் ஜூலை 21 அன்று வெளியாகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கும் படம் பான் இந்தியா படம் என்பதால், டிரெய்லர் வெளியீட்டு விழாவை தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் இணைந்து நடத்த, தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா, கரண் ஜோஹர் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் மற்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்கும்  டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் திரைக்குப் பின்னாலான தயாரிப்பு பணிகளை காட்டும், ஒரு வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். சார்மி இரண்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான திட்டத்தை முன்வைக்க, கரண் அதற்கு ஒப்புதல் அளிக்கிறார், மேலும் டிரெய்லர் புயலை உருவாக்கப் போகிறது என்று விஜய் கருத்து தெரிவிக்கிறார். ஹைதராபாத் நிகழ்வு RTC X சாலையில் உள்ள சுதர்சன் தியேட்டரில் காலை 9:30 மணிக்கும், மும்பை நிகழ்வு அந்தேரியில் உள்ள சினிபோலிஸில் இரவு 7:30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

டீஸர், போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் மூலம் படக்குழு ஏற்கனவே படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு, அதிகரித்துள்ளது.

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

See Also

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன்மொழி இந்தியா திரைப்படமான ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

தொழில் நுட்ப குழு
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)