தனுஷ் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
நடிகர் தனுஷ் மீண்டும் தனது சகோதரர் இயக்கத்தில் நடித்து முடித்து விரைவில் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் படம் ‘நானே வருவேன்’. தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன், அசுரன் போன்ற படங்களை தயாரித்த வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது. தனுஷுடன் இந்த படத்தில் செல்வராகவன் இணைந்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், மேலும் படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு கணேசன், ஷெல்லி கிஷோர் போன்ற பலர் நடித்துள்ளனர்.
தற்போது இப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, நானே வருவேன் படக்குழு தனுஷ் பிறந்தநாள் தினமான ஜூலை-28ம் தேதி படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படமானது தேஜாவு எஃபெக்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, தனுஷ் வெவ்வேறு இரண்டு விதமான தோற்றத்தில் இப்படத்தில் காட்சியளிப்பார். இதில் தனுஷுக்கு இந்துஜா மற்றும் ஸ்வீடிஷ் நடிகை எல்லி அவ்ராம் நடித்துள்ளனர். படத்தின் முக்கியமான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது, தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நானே வருவேன் படத்தை, மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகும் அதே தினத்தில் செப்டெம்பர்-30ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.