அம்முச்சி 2′ ஆஹா ஒடிடி விமர்சனம்
காதலியான மித்ராவை பார்க்க,,,,, நாயகன் அருண் ,,,கோவாவுக்கு செல்கிறேன் என அம்மாவிடம் பொய் சொல்லி கோடங்கிபாளையத்தில் உள்ள மாமன் பிரசன்னா பாலசந்திரன் வீட்டில் அவரது மகன் சசியுடன் தங்குகிறார்.
சசி கிராமத்தில் உள்ள ஊர் மக்களிடம் ஏதாவது பிரச்சனை வம்பு செய்து பஞ்சாயத்தில் புகார் வருமளவில் தந்தையான பிரசன்னா பாலசந்திரனிடம் தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ,,,,
அருணின் காதலி மித்ரா மேற்கொண்டு காலேஜில் படிக்க ஆசைப்பட்டு காதலன் அருணிடம் முறையிட ,,,, இநேரத்தில் மித்ராவின் குடிகார தந்தையான சந்திரகுமார் மேற் படிப்பு மித்ரா படிக்க முட்டு கட்டை போட்டு பக்கத்துக்கு ஊரில் உள்ள எப்போதும் விறைப்பாக இருக்கும் அடிதடி ரவுடியான மசநாய் ராஜேஷ் பாலச்சந்திரனுக்கு திருமண நிச்சயம் செய்ய முடிவெடுக்கும் நேரத்தில் எனக்கு திருமண ஆசையில்லை நான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என மாப்பிளை வீட்டாரிடம் அதிரடியாய் மித்ரா பேச திருமண நிச்சயம் நின்று போகிறது . மித்ராவை மேற்கொண்டு படிக்க வைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படும் காதலன் அருண் தன் மாமன் பிரசன்னா பாலசந்திரன் முன்னிலையில் , மித்ராவின் தந்தையிடம் பேசுகிறார் .
பேச்சு வார்த்தை மிக பெரிய பிரச்சனையாகி இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டு,,,,,, முரசு அடி ,கம்பு சண்டை, மல்யுத்தம், உறிஅடி, ரேக்ளா,ஆகிய ஐந்து போட்டிகளில் மசநாய் ராஜேஷ் பாலச்சந்திரனுடன் போட்டி போட்டு ஜெயித்தால் மித்ராவை திருமணம் செய்து தருகிறேன் என மித்ராவின் தந்தை பிரசன்னா பாலசந்திரனிடம் சவால் விட,,, அருணின் சார்பில் பிரசன்னா பாலசந்திரனும்,,,, போட்டிக்கு நாங்கள் தயார் ஜெயித்து காட்டுகிறோம் என ஆக்ரோஷமாக எதிர் சவால் விட,,,, அத்தனை போட்டிகளிலும் எப்படியாவது ஜெயித்து மித்ராவை திருமணம் செய்து கொள்ள வேண்டும்என அருண் ஒவ்வொரு போட்டிக்கான பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் நிலையில்,,,,, பாட்டி சின்னமணி அத்தனை போட்டிகளிலும் அருணை தோற்கடிக்க செய்து ஊரை விட்டே அனுப்ப பேரன் சசியுடன் சேர்ந்து திட்டமிடுகிறார் .
இறுதியில் ஐந்து போட்டிகளில் மசநாய் ராஜேஷ் பாலச்சந்திரனை ஜெயித்து மித்ராவின் மேற் படிப்பு ஆசையை அருண் நிறைவேற செய்து மித்ராவை திருமணம் செய்து கொண்டாரா?சின்னமணி தன் பேரன் சசியுடன் போட்ட தோற்கடிக்கும் திட்டத்தில் இருந்து அருண் போட்டிகளில்வெற்றி பெற்றாரா? இல்லையா என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் ஆஹா தமிழ் ஒடிடி தொடர்தான் ‘அம்முச்சி 2’கதையின் நாயகன் அருண்குமார் துடி துடிப்பான இளைஞனாக காதல் , நகைச்சுவை, செண்டிமெண்ட் , போட்டிகளில் பங்கேற்க அவர் எடுக்கும் பயிற்சிகளில் காட்டும் உணர்ச்சிமயமான முக பாவனைகள் என எதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார் .நாயகி மித்ரா ரங்கராஜ் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி துறு துறு நடிப்பில் ஜொலிக்கிறார் .
அம்முச்சியாக சின்னமணி , முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா பாலச்சந்திரன் , மிரட்டும் வில்லனாக ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் சாவித்ரி ,மீனா ,தனம் ,ஸ்ரீஜா ,சசி செல்வராஜ் ,ரோகிணி ,,சந்திரகுமார் ,வைத்தீஸ்வரி , மனோஜ் என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.விவேக் சாரோவின் இசையும் ,சந்தோஷ்குமாரின் ஒளிப்பதிவும் கதை களத்திற்கு பக்க பலம் .மேற் படிப்பு படிக்க வேணும் என ஆசைப்படும் பள்ளி படிப்பு முடிக்கும் பெண்களை பெற்றோர்கள் அவர்களது விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இன்றைக்கும் சில நகரங்களிலும் , கிராமங்களிலும் நடை முறையில் இருப்பதை,,,, நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் தெளிவான திரைக்கதை அமைப்பில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி.