Now Reading
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் விஜய், அஜித்! விஜய் சேதுபதி,

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் விஜய், அஜித்! விஜய் சேதுபதி,

இன்றைய ஹாட் டாப்பிக் ஆகா மாறி இருக்கிறது நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி. இந்த ஜோடிகளை விட இவர்களின் திருமணத்தை அதிகம் எதிர்பார்த்தது ரசிகர்களும், திரை வட்டாரங்களும் தான்.  அனைவரும் எதிர்பார்த்தபடியே நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் மூன்று முடிச்சை போட்டுவிட்டார்.  பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் முக்கியமான நபர்களை மட்டுமே வைத்து இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

எதிர்பார்த்தபடியே ரஜினிகாந்த் திருமண வைபோகத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இயக்குனர் ஹரி, சிவா, கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்ததாக திருமணத்தில் விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு, கார்த்தி, கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார், மணிரத்னம், பொன்வண்ணன், ஷாருக்கான், ராதிகா சரத்குமார்,  போனி கபூர், அட்லீ, அனிரூத் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.  அதனைத்தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டார், விஜய்யை தொடர்ந்து அஜித் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மனைவி ஷாலினி, அவரது குழந்தைகள் மற்றும் அவரது தங்கை ஷாமிலி மட்டும் கலந்துகொண்டு இருக்கிறார்.  ஏகே62 படத்தை விக்னேஷ் இயக்குவதால் அஜித் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.

 

See Also

ஜூன் 10ம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு விழாவில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  பத்திரிக்கையாளர்களை திருமணத்திற்கு அனுமதிக்காத நிலையில் ஜூன்-11ம் தேதியன்று பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக ஏற்கனவே விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.  மேலும் இவர்களது திருமணத்தில் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள், இவர்களது உடை எப்படி இருந்தது என்பதை அறிய ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கின்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)