Now Reading
வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை பூர்ணா

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை பூர்ணா

தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகை பூர்ணா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அவரின் உண்மையான பெயர் சாம்னா கசிம். தமிழில் பரத் நடிப்பில் வெளியான ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா, அடிக்கடி போட்டோஷூட் நடித்து புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இந்நிலையில், லேட்டஸ்டாக தன்னுடைய வருங்காலக் கணவரை ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வருங்கால கணவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, என் வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். பூர்ணாவின் வருங்கால கணவர் துபாயில் தொழிலபதிராக இருக்கிறார். அவரது பெயர் சானித் ஆசிப் அலி.அண்மையில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெற்று திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண தேதி குறிக்கப்பட்டிருந்தாலும் இப்போதைக்கு பூர்ணா அறிவிக்கவில்லை. விரைவில் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)