வாய்தா திரை விமர்சனம்..!
பல கிராமங்களில் இன்னமும் சாதி வெறி தலை தூக்கி அடி கொண்டு தான் இருக்கிறது.நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியை சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்த திருத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம்தான் வாய்தா.
பணத்துக்கும், உறவுகளுக்கும் நீதி எப்படி வளைகிறது.எளியவர்க்கும், ஏழைகளுக்கும் அது எப்படி இருட்டடிப்பு செய்யப் படுகிறது என்பதை சிவப்பு சிந்தனையுடன் துணிச்சலாக பேசியிருக்கிறது வாய்தா திரைப்படம்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி மு.ராமசாமி மீது பக்கத்து ஊர் உயர்சாதி குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் செல்போன் பேசிக் கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு வந்து சலவை தொழிலாளி ராமசாமி மீது மோத அவரது தோள்பட்டை எலும்பு முறிந்து விடுகிறது.அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தை கைப்பற்றி அவருடைய விட்டுகுள் பூட்டி வைக்கிறார்.விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறைவான நிவாரணம் தொகையை நஷ் ஈடாக தர முயல்கிறார்.
அதற்கான நிவாரணம் தொகை கேட்கச் சொல்லி அவரைத் தூண்டி விடும் உள்ளூர் உயர் சாதி ஆட்களும் அவர்களுடன் முரண்படும் பக்கத்து ஊர் ஆட்களும் சாதி ஆணவத்தோடு எப்படி இந்த சலவைத் தொழிலாளி குடும்பத்தை பந்தாடுகிறார்கள்.அதற்கு எதிர்ப்பு தெரிவிக் கிறார் முக்கியபுள்ளி காவல்துறையினர் வந்து ராம்சாமியை மிரட்டுகிறது.படிப்படியாக மோதல் முற்றி விவகாரம் கோர்ட்டுக்கு செல்கிறது.அங்கு நீதியை எப்படி தங்களுக்கு சாதமாக சிலர் வளைக்கின்றனர்.
ஒரு நிலையில் ஆதே சாதி ஆணவம் காரணமாக ஒன்று சேர்ந்து எப்படி அந்தக் குடும்பத்தை கையறு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.இதில் கோர்ட்டுகளில் வாய்தா வாய்தா என்று போட்டு எப்படி ஏழை மக்களை அலைக் கழித்து சீரழிக்கிறார்கள் நிவாரண தொகை கிடைத்ததா? கிடைக்க வில்லையா? என்பதுதான் இந்த வாய்தா திரைப்படத்தின் மீதி கதை.சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
மு.ராமசாமியின் நடிப்பு பார்ப்போர் மனதைக் கலங்க வைக்கிறார்.அவர் மட்டுமல்லாது முக்கிய கதாபாத்திரத்தை ஏற்ற அனைவரும் கதைக்கு தேவையானதை நடிப்பை மட்டுமே வழங்கியுள்ளனர்.
இந்த வாய்தா திரைப்படத்தின் புதுமுகம் புகழ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.தாநாயகனாக புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் புகழ் நல்வரவு.விசைத்தறித் தொழிலாளியாக அவர் வரும் போதே இரசிகர்களுக்கு நெருக்கமாகி விடுகிறார்,ஒரு கட்டத்தில் குடும்பத் தொழிலான இஸ்திரி போடும் வேலையை வேண்டா வெறுப்பாகச் செய்யுமிடத்திலும் ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு எதிராக ஆவேசம் கொள்ளுமிடத்திலும் எனக்கு நடிக்கவும் வருமென்று கதாநாயகன் புகழ் காட்டியிருக்கிறார்.
கதாநாயகியுடனான காதல் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்துப் புகழ் பெறுகிறார் கதாநாயகன் புகழ்.இந்த வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக ஜெசிகாபவுல் நடித்துள்ளார்.கதாநாயகி ஜெசிகாபவுல் இந்த திரைப்படத்துக்கேற்ற அழகி காதலனுடனான காட்சிகளில் எதார்த்தமாக நடித்து இருப்பது அவருடைய பலம்.
சிறப்புத் தோற்றத்தில் வந்து நம்பிக்கையூட்டும் நாசர் அருமை.ஆதிக்கசாதி மனோபாவத்தை அப்பட்டமாக வெளிப் படுத்தியிருக்கும் நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா உட்பட எல்லா நடிகர்களும் அருமையான நடிப்பை செய்திருக்கிறார்கள் சேதுமுருகவேல் மற்றும் அங்காகரகன் ஒளிப்பதிவில், விசைத்தறி கூடங்கள் உட்பட அனைத்து காட்சிகளும் இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்..நீதிமன்றக் காட்சிகள் ஒளிப்பதிவில் இரசிக்கும்படி இருக்கின்றன.
இசையமைப்பாளர் லோகேஷ்வரன் சி இசையில் பாடல்கள் அருமையாக உள்ளது.பின்னணி இசையும் கதைக்கு என்ன தேவையோ அளவோடு கொடுத்திருக்கிறார்.ஒரு சிறிய சம்பவத்தை கருவாக எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு சாதி அரசியல் நடக்கிறது என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசியி ருக்கிறார் புதுமுக இயக்குனர் மகிவர்மன் சி.எஸ்.
‘வாய்தா’ நிச்சயம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டிய திரைப்படம்.