Now Reading
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக இயங்கி வருபவர் பார்த்திபன், தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இவர் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும் இந்தப்படம் தட்டிச் சென்றது. தற்போது இயக்குநர் பார்த்திபன், இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார், முதன்முதலாக  லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது.

 

மேலும் இந்தப் படத்திற்காக 3 ஆஸ்கர் விருது வின்னர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, சவுண்ட் டிசைனர் கிரைக் மான், VFX நிபுணர் கட்டா லங்கோ லியோன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர்.

See Also

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் ‘மாயவா தூயவா’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘இரவின் நிழல்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.

மேலும், ‘இரவின் நிழல்’ படம், தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் 75-வது கேன்ஸ் விழாவில் சர்வதேச திரைக்கலைஞர்கள் முன்னிலையில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘இரவின் நிழல்’ திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)