Now Reading
80ஸ் பில்டப் விமர்சனம்

80ஸ் பில்டப் விமர்சனம்

தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் சந்தானத்துக்கு கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி திருப்புமுனை கொடுத்தது. இதையடுத்து பார்முக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிக் என்கிற அட்டர் பிளாப் படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சந்தானம். அந்த தோல்வி இருந்து மீண்டு வர அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படம் தான் 80ஸ் பில்டப்.

இப்படத்தை கல்யாண் இயக்கி இருக்கிறார். இவர் குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற காமெடி படங்களை இயக்கியவர் ஆவார். சந்தானத்துடன் இவர் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால், இப்படத்தையும் காமெடி கதையம்சம் கொண்ட படமாகவே உருவாக்கி இருக்கிறார் கல்யாண். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். இவர் சன் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.

80ஸ் பில்டப் படத்தில் சந்தானத்துடன் தங்கதுரை, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டாக ரிலீஸ் ஆகி உள்ளது. 80ஸ் நாயகன் கமல்ஹாசனின் ரசிகனாக இப்படத்தில் நடித்திருக்கிறார் சந்தானம்.

See Also

இதையடுத்து  படத்தின் இயக்குனர் கல்யாண், இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என கூறினார். அது 80ஸ் பில்டப் ஆக வருமா அல்லது 90ஸ் பில்டப் ஆக வருமா என்கிற கேள்விக்கு நிச்சயம் 80ஸ் பில்டப் ஆக தான் வரும் என கூறினார்

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)