Now Reading
மருத்துவமனையில் கமல்ஹாசன்.அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சி

மருத்துவமனையில் கமல்ஹாசன்.அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சி

லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐதராபாத் சென்று திரும்பிய அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என்று பதறிப்போய் இருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)