பர்ஸ்ட் ‘சுறா’ படம் பண்றதா இருந்தது… நான் தான் ரிஜெக்ட் பண்ணிட்டு VTV பண்ணேன் – சிம்பு சொன்ன ஷாக்கிங் தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தனக்கு சொன்ன முதல் ஆக்ஷன் கதை பற்றி மனம்திறந்து பேசியுள்ளார்.
நடிகர் சிம்பு, இயக்குனர் கவுதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் முத்துவீரன் என்கிற 20 வயது கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. அவருக்கு ஜோடியாக பாவை என்கிற கேரக்டரில் நடிகை சித்தி இத்னானி நடித்து இருக்கிறார். இதுதவிர ராதிகா, சித்திக், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உலகமெங்கும் ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. சிம்புவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக வெந்து தணிந்தது காடு மாறியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தனக்கு சொன்ன முதல் ஆக்ஷன் கதை பற்றி மனம்திறந்து பேசியுள்ளார் சிம்பு. அதில் அவர் கூறியுள்ளதாவது : நாங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பண்ணுவதற்கு முன் என்னுடைய சிலம்பாட்டம் படம் ரிலீசாகி இருந்தது. அதனால் எனக்கு முதலில் ஆக்ஷன் கதை ஒன்றை சொன்னார் கவுதம். அப்படத்திற்கு சுறா என பெயரிட்டிருந்தார்.
ஆனால் அந்த நேரத்தில் நான் பி மற்றும் சி செண்டர் ஹீரோவாக இருந்ததால் ஏ செண்டர் ஆடியன்ஸையும் கவர வேண்டும் என விரும்பினேன். அந்த நேரத்தில் என்னை மன்மதன் நடிகர் என்று தான் எண்ணினார்கள். அதனால் அப்போது எனக்கு பெண் ரசிகைகளும் குறைந்த அளவில் இருந்தனர். அதனால் கவுதம் கிட்ட நம்ம ஒரு லவ் ஸ்டோரி பண்ணலாம்னு சொன்னேன்.