சிம்புவை மணக்கும் பிரபல சீரியல் நடிகை?
மாநாடு படம் வெற்றிக்குப் பிறகு சிம்பு அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடைவிடாமல் நடித்த சிம்பு, புதுப்படங்களிலும் கமிட்டாகி வருகிறார்
இது ஒருபுறம் இருக்க, சிம்புவின் திருமணம் குறித்த பேச்சும் லைம் லைட்டில் இருந்து கொண்டே இருக்கிறது. பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி. யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த அவர், சிம்பு திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அவர் போட்ட பதிவில், ” ஒருநாள் எல்லோருக்கும் திருமணம் நடந்துவிடும். நானும் STR மட்டும் எஞ்சியிருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன், நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்ரீ நிதி, நல்லா தான் இருக்கும். ஆனால் எனக்கு ஆள் இருக்கே என சிம்பிளாக முடித்துவிட்டார்.